மே 8 நடப்பு நிகழ்வுகள்

0

மே 8 நடப்பு நிகழ்வுகள்

மே 8 – சர்வதேச செஞ்சிலுவை தினம்

  • உலகம் முழுவதும், போரின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் உருவான அமைப்புதான் ரெட் கிராஸ்.
  • இதற்குக் காரணமானவர் ஹென்றி டுனான்ட்.
  • இவர் 1828ம் ஆண்டு மே 8 இல் பிறந்தார், முதன்முறையாக 1948ம் ஆண்டு, ஹென்றியின் பிறந்த நாளான மே 8 அன்று செஞ்சிலுவை தினம் கொண்டாடப்பட்டது.

மாநிலம்

மகாராஷ்டிரா

புனேவில் புதிய விமான நிலையம்

  • பாரதத்திற்கான அடுத்த தலைமுறை விமான நிலையங்களை நிர்மாணிக்கும் முயற்சியின் பகுதியாக விமான நிலையங்களின் திறனை மேம்படுத்த உதான் திட்டத்தின் கீழ் புனே புரந்தரில் புதிய விமான நிலையத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
  • நொய்டா சர்வதேச விமான நிலையம் அமைக்க உத்தர பிரதேச அரசுக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தார்.

தமிழ்நாடு

சென்னையில் ஸ்காபா ஆலை

  • இங்கிலாந்தின் மான்செஸ்டரைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்காபா பிஎல்சி குழுமத்தின் ஆலை சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.
  • தொழில்துறை மற்றும் மருத்துவத் துறைக்கான ஒட்டும் தன்மையுள்ள டேப்களை தயாரிப்பதில் இந்நிறுவனம் முன்னணியில் உள்ளது.
  • இந்தியாவில் ஸ்காபா இந்தியா நிறுவனம் தொடங்கும் முதலாவது ஆலை இதுவாகும்.

தேசியசெய்திகள்

15வது ஆசிய ஊடக உச்சிமாநாடு

  • 15வது ஆசிய ஊடக உச்சிமாநாட்டை (ஆஊஉ) புதுதில்லியில் உள்ள இந்திய மக்கள் தொடர்புகல்விக்கழகம் இந்திய ஒலிபரப்புப் பொறியியல் ஆலோசகர்கள் குழுமம் ஆகியவற்றுடன்இணைந்து செய்தி, மத்திய ஒலிபரப்பு அமைச்சகம் புதுதில்லியில் மே  10 முதல் 12 வரை நடத்தவிருக்கிறது.
  • இந்தநிகழ்வை இந்தியா முதன்முறையாக நடத்துகிறது.
  • மையக் கருத்து – “எங்கள் கதைகளைச் சொல்கிறோம் –ஆசியாவிலும் அதற்கு மேலும்”

ஆயுதப் படை சட்டம் படிப்படியாக வாபஸ் பெறப்படும்

  • வடகிழக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் ஆயுதப் படை சட்டம் படிப்படியாக வாபஸ் பெறப்படும் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜுஜு தெரிவித்துள்ளார்.
  • மேகாலயத்தில் அமலில் இருந்த ஆயுத படை சட்டம் அண்மையில் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டது.
  • மேலும் அருணாசல பிரதேசத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஆயுத படை சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

  • தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அமலாக்கப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் டெல்லியில் 08.05.2018 நடந்தது.
  • இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 10 கோடி ஏழைக் குடும்பங்கள் காப்பீட்டு வசதியைப் பெற்றுக் கொள்ளலாம்.

சர்வதேச செய்திகள்                                  

  • அர்மேனியா புதிய பிரதமர் – நிக்கோல் பாஷின்யான்

டிரம்ப்-கிம் ஜாங் அன் சிங்கப்பூரில் சந்தித்து பேச வாய்ப்பு

  • அமெரிக்க அதிபரான டிரம்பும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும் சிங்கப்பூர் நாட்டில் சந்தித்து பேச்சுவார்த்தையை நடத்த போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலகின் சிறந்த 18 ரயில் பயணங்கள் பட்டியல் 

  • இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழான ‘தி கார்டியன்’ (The Guardian) உலகின் சிறந்த 18 ரயில் பயணங்களை பட்டியலிட்டுள்ளது.
  • இதில் ஆசியா கண்டத்தில் இந்தியாவில் நீலகிரி மலை ரயிலும், இலங்கையின் யாழ் தேவி ரயில் மற்றும் சீனாவின் குங்ஹாய் – திபெத் ரயில் ஆகிய மூன்று ரயில் பயணங்களை தேர்வு செய்துள்ளது.

வணிகசெய்திகள்

ஐசிஐசிஐ வங்கி லாபம் 50 சதவீதம் சரிவு

  • வாராக் கடனுக்கான ஒதுக்கீடு அதிகரித்ததால் வங்கியின் லாபம் பாதியாகக் குறைந்துள்ளது.
  • ஐசிஐசிஐ வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 50 சதவீத அளவுக்கு சரிந்துள்ளது.

அறிவியல்

சிறுநீரக செல்களை ஆராய்ச்சி செய்த அமெரிக்க இந்தியருக்கு 16 லட்சம் டாலர் உதவித்தொகை

  • அமெரிக்காவில் உள்ள ஹவுஸ்டன் பல்கலைக்கழக மருந்தியல் பேராசிரியர் தாஹிர் ஹுசேன் சிறுநீரகத்தில் இயற்கையாக AT2R(angiotensin type 2 receptor) என்ற புரதம் இருப்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளார்.
  • இந்த AT2R புரதத்தை பயன்படுத்தி சிறுநீரக எரிச்சலை கட்டுப்படுத்த முடியும்.

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்துவதற்காக ‘இன்சைட்’ ரோபோவை நாசா மையம் அனுப்பியுள்ளது.

  • செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ‘நாசா’ மையம் ஏற்கனவே ‘ரோவர்’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது.
  • தற்போது ‘இன்சைட்’ என்ற புதிய ரோபோவை செவ்வாய் கிரகத்துக்கு ‘நாசா’ அனுப்பியுள்ளது.

விளையாட்டுசெய்திகள்

கிரிக்கெட்

  • ஆஸ்திரேலியா ஒருநாள் அணிக்கு – டிம் பெய்ன் கேப்டன்
  • டி20 அணிக்கு – ஏரோன் பிஞ்ச் கேப்டன்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்

  • ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபனில் ஜோகோவிச் நேர்செட்டில் ஜப்பான் வீரர் நிஷிகோரியை வீழ்த்தினார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!