நடப்பு நிகழ்வுகள் QUIZ டிசம்பர் 18 2018

0
323

நடப்பு நிகழ்வுகள் QUIZ டிசம்பர் 18 2018

சர்வதேச குடிபெயர்ந்தோர் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

2000 டிசம்பர் 4 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத்த தொடர்ந்து டிசம்பர் 18 அன்று சர்வதேச குடிபெயர்ந்தோர் தினம் அனுசரிக்கப்படுகிறது. 2018 தீம்: Migration with Dignity.

ஐ.நா.வின் உத்தியோகபூர்வமற்ற மொழி எது?

1973ம் ஆண்டு டிசம்பர் 18 அன்று ஐ.நா பொது சபை உத்தியோகபூர்வ ஐ.நா. மொழியாக அரபியை அங்கீகரித்தது. அதன் காரணமாக ஐ.நா. அரபு மொழி தினம் டிசம்பர் 18 அன்று ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.

எந்த மாநில அமைச்சரவை விவசாயிகளுக்கான கடன் தொகையை 25 சதவிகிதம் தள்ளுபடி செய்ய முடிவுசெய்தது?

அசாம் மாநில அமைச்சரவை விவசாயிகளுக்கான கடன் தொகையை 25 சதவிகிதம் தள்ளுபடி செய்ய முடிவு.

ராஜ்குமார் சுக்லா எதனுடன் தொடர்புடையவர்?

பிஹார் மாநிலத்தின் சம்பரண் மாவட்டத்தில் அவுரி சாகுபடி செய்த விவசாயிகளின் உரிமைகளுக்காக காந்திஜி நடத்திய முதல் போராட்டத்திற்கு காந்தியை அந்த இடத்துக்கு வற்புறுத்தி அழைத்துச் சென்றவர் ராஜ்குமார் சுக்லா. காந்திஜி தன்னுடைய தாய்நாட்டில் தொடங்கிய முதல் சத்தியாகிரகப் போரை வெற்றிகரமாக நடத்த உதவியர் ராஜ்குமார் சுக்லாதான் என்றால் மிகையில்லை.

16 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு 6,100 கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்வதாக எந்த மாநில முதல்வர் அறிவித்தார்?

16 லட்சம் விவசாயிகளுக்கு 6,100 கோடி ரூபாய் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் அறிவித்துள்ளார்.

ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகள் ஜூலை 1, 2019 முதல் கட்டாயமாக எந்த நாட்டில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது?

நியூசிலாந்தில், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகள் கட்டாயமாக பயன்படுத்த தடை, இந்த விதிமுறைகளை ஜூலை 1, 2019 முதல் நடைமுறைப்படுத்துகிறது.

ஜிசாட் 7 ஏ தகவல் தொடர்பு சேவைகளை எந்த பேண்டில் அளிக்கவுள்ளது?

இந்திய துணைக் கண்டத்தில் இருப்பவர்களுக்கு கு[Ku] பேண்ட் மூலம் தகவல் தொடர்பு வசதியை ஜிசாட் 7 ஏ அளிக்கும்.

தேசிய குடிமக்கள் பட்டியல், எந்த மாநிலத்துடன் தொடர்புடையது?

அசாம் அல்லாத பிற மாநிலங்களுக்கு ,தேசிய குடிமக்கள் பட்டியலை நீட்டிக்க எந்த முன்மொழிவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பீகாரின் பாட்னாவில் கங்கா ஆற்றின் குறுக்கே எந்த தேசிய நெடுஞ்சாலை[NH]- யில் ஒரு புதிய பாலம் கட்ட மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது?

பீகாரின் பாட்னாவில் கங்கா ஆற்றின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலை[NH]-19 இல் ஒரு புதிய பாலம் கட்ட மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here