நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 24 2018

0

நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 24 2018

தேசிய செய்திகள்

ஜார்கண்ட்

ஜார்கண்ட் தினக் கொண்டாட்டம்

  • கோவாவில் சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) ஜார்கண்ட் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் IFFI யில் ஜார்கண்ட் கவனம் செலுத்தும் மாநிலமாக அறிவிக்கப்பட்டது. முதல் தடவையாக திருவிழாவில் கவனம் செலுத்தும் மாநிலமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புது தில்லி

மாலத்தீவின் வெளியுறவு மந்திரி இந்தியாவிற்கு 4 நாள் பயணம்

  • மாலத்தீவு வெளியுறவு மந்திரி அப்துல்லா ஷாஹித் இந்தியாவிற்கு நான்கு நாள் பயணமாக புது டெல்லி வந்து சேர்ந்தார்.

சர்வதேச செய்திகள்

வடக்கு மற்றும் தென் கொரியாவிற்கான பொருளாதார தடைகளிலிருந்து UNSC விலக்கு அளித்தது

  • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வடக்கு மற்றும் தென் கொரியாவிற்கு எல்லையில் ரயில்வேயை மீண்டும் இணைப்பதற்கான ஒரு ஆய்வு நடத்த பொருளாதார தடைகளிலிருந்து விலக்கு அளித்தது.

அறிவியல் செய்திகள்

மழை தாக்கம் மற்றும் இயற்கை பேரழிவுகளை கண்காணிக்க புதிய தொழில்நுட்பம்

  • மழையால் ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு அதிகரிப்பதை மதிப்பிடுவதற்கான ஒரு புதிய தொழில்நுட்பத்தை இந்திய வானிலை துறை (IMD) உருவாக்கியுள்ளது.
  • முன் நிகழும் சூழ்நிலையைக் காட்டும் ‘தாக்கம் அடிப்படையிலான முன்அறிவிப்பு அணுகுமுறை’ என்று அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம், மாநில அரசாங்கங்களை மழை தாக்கத்தை கண்காணிக்கவும் மற்றும் நிகழ்நேர முடிவுகளை எடுக்கவும் உதவும்.

பாலில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க மொபைல் போன் சார்ந்த சென்சார்ஸ்

  • பாலில் கலப்படத்தை கண்டுபிடிக்க ஐஐடி- ஹைதராபாத்[ஐஐடி-] ஆய்வாளர்களால் ஸ்மார்ட் போன் அடிப்படையிலான சென்சார் உருவாக்கப்பட்டது.

மோப்ப நாய்களுக்கு பதிலாகரோபோமூக்கு

  • விஞ்ஞானிகள் ஒரு செயற்கை “ரோபோ மூக்கு” கருவியை உருவாக்கியுள்ளனர், இது போதைப்பொருள் மற்றும் வெடிமருந்துகளை கண்டறிவதற்கு நாய்களுக்குப் பதிலாக வாழும் எலி செல்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ‘ரோபோ-மூக்கை’ பயன்படுத்தத் திட்டம்.

மாநாடுகள்

சீனாஇந்தியா எல்லை பேச்சுவார்த்தை

  • சீனாவின் செங்டு நகரில் இந்திய எல்லை மற்றும் சீன எல்லையின் சிறப்பு பிரதிநிதிகள் இடையே எல்லை குறித்து 21-வது சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியது.

ஆர்தோக்னாதிக் அறுவை சிகிச்சை ஒர்க்ஷாப்

  • அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், எய்ம்ஸ் புது தில்லியில் இருநாள் ஆர்தோக்னாதிக் அறுவை சிகிச்சை ஒர்க்ஷாப் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இது தாடை திருத்தும் அறுவை சிகிச்சை என்றும் அழைக்கப்படும். 

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ACROSS திட்டத்தை தொடர அனுமதித்தது

  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2017-2020 ஆம் ஆண்டில், வளிமண்டலம் மற்றும் காலநிலை ஆராய்ச்சி-மாதிரிக் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் சேவைகள் (ACROSS) என ஒன்பது உப திட்டங்களை தொடர அனுமதித்துள்ளது.
  • இந்திய வானியல் துறை (IMD),வெப்ப மண்டல வானிலை ஆய்வு மையம் (IITM), நடுத்தர வரம்பு வானிலை முன்னறிவிப்புக்கான தேசிய மையம் (NCMRWF) மற்றும் கடல் தகவல் சேவைக்கான இந்திய தேசிய மையம் (INCOIS) ஆகிய மையங்களின் உதவியோடு புவி அறிவியல் அமைச்சகம் மூலம் செயல்படுத்தப்படும்.

விருதுகள்

  • EURAXESS சயின்ஸ் ஸ்லாம் இந்தியா விருது – திரு சக்ரபூர்த்தி [தியேட்டரின் மூலம் அறிவியல் தொடர்புக்காக]

விளையாட்டு செய்திகள்

பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

  • புது தில்லி மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் 48 கிலோ எடை லைட் ஃப்ரீவெயிட் பிரிவின் இறுதிப் போட்டியில் 5-0 என்ற கணக்கில் உக்ரைனின் ஹன்னா ஓகோட்டாவை தோற்கடித்து மேரி கோம் வரலாற்றில் இடம் பிடித்தார்.
  • இதன் மூலம், மணிப்பூர் மாநிலத்தின் 35 வயதான இந்திய குத்துச்சண்டை வீரர் ஆறு உலக சாம்பியன்களை வென்ற வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான குத்துச்சண்டை வீரர் எனும் சாதனை படைத்தார்.

சையத் மோடி சர்வதேச சாம்பியன்ஷிப்

  • லக்னோவில் நடைபெறும் சையது மோடி சர்வதேச சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் தொடரில், சாய்னா நேவால், உட்பட ஏழு இந்திய வீரர்கள் அரை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!