நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 05 2019

0

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 05 2019

தேசிய செய்திகள்

அசாம்

75,000 இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

  • அசாம் அரசு கடந்த ஆண்டு 75 ஆயிரம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்துள்ளது. 

மத்திய பிரதேசம்

70% உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்த கட்டாயம்

  • மத்தியப்பிரதேச அரசு அனைத்து தொழில்களிலும் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளில் எழுபது சதவீதத்தை வழங்குவதற்கு கட்டாயமாக்கியுள்ளது. புதிய தொழிற்துறை கொள்கை மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

புது தில்லி

எம்எஸ்எம்இ அமைச்சகத்தால்  மினிரத்னா பிரிவின் கீழ் NFDC வெற்றி பெற்ற நிறுவனமாக அறிவிப்பு

  • குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) அமைச்சகத்தால் மினிரத்னா (பிரிவு II) கீழ் இந்தியாவின் தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் வெற்றி பெற்றதாக அறிவிப்பு . எஸ்.சி./எஸ்டி தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்காக அவர்களின் வேலைகளை அங்கீகரிப்பதற்காக எம்எஸ்எம்இ அமைச்சகம் இதை ஏற்பாடு செய்துள்ளது.

யுபி அரசின் மீது பசுமை தீர்ப்பாயம் ரூ. 25 லட்சம் அபராதம்

  • தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரப்பிரதேச அரசுக்கு ரூ. 25 லட்சம் அபராதம் விதித்தது. மேல் கங்கா கால்வாயில் அழுக்கடைந்த தண்ணீர் கலப்பதை தவிர்ப்பதில் தோல்வியடைந்ததால் இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

சர்வதேச செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு

  • வெனிசுலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்தோவை கிட்டத்தட்ட 20 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆதரித்துள்ளன.

அபுதாபியில்புனித பிரான்சிஸ் சர்ச்” & ‘கிராண்ட் இமாம் அஹ்மத் அல்தயீப் மசூதி

  • அபு தாபியில் இரண்டு மதத் தலைவர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக “புனித பிரான்சிஸ் சர்ச்” மற்றும் “கிராண்ட் இமாம் அஹ்மத் அல்-தயீப் மசூதி” ஆகியவற்றை கட்டத் திட்டமிட்டுள்ளதாக யுஏஇ தலைவர்கள் அறிவித்தனர்.

ஈரான் 50,000 குற்றவாளிகளுக்கு மன்னிப்பு

  • 1979 ஈரானின் இஸ்லாமியப் புரட்சியின் 40வது ஆண்டு விழாவின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ​​50,000 கைதிகள் தலைவர் அயத்துல்லா காமெனீயி மன்னிப்பு அளிப்பார் என்று ஈரானிய நீதித் தலைவர் அமொலி லரிஜானி கூறினார்.

தரவரிசை & குறியீடு

ஐசிசி ஒருநாள் தரவரிசை

  • 1) இங்கிலாந்து 2) இந்தியா 3) தென் ஆப்பிரிக்கா

மாநாடுகள்

67வது ஆண்டு ஆயுதப் படைகள் மருத்துவ மாநாடு

  • ஆயுதப் படைகள் மருத்துவக் கல்லூரி, புனே 67 வது வருடாந்தர ஆயுதப் படைகள் மருத்துவ மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டை ஆயுதப்படை படைகள் மருத்துவ சேவையின் பொது இயக்குனர் லெப்டினண்ட் ஜெனரல் பிபின் பூரி தொடங்கி வைத்தார்.

நியமனங்கள்

  • டேவிட் பெர்ன்ஹார்ட் – அமெரிக்க உள்துறை செயலாளர்

திட்டங்கள்

ஷெர்ரி சம்ரிதி உத்சவ்

  • வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் (MoHUA) ஷெர்ரி சம்ரிதி உத்சவ், தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டம் (DAY-NULM), தீன்தயால் அந்தியோதயா திட்டம் (DAY-NULM) ஆகியவற்றை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டது இந்த திட்டம்.

இந்தியாவை அறிவோம் திட்டம்

  • 53-வது இந்தியாவை அறிவோம் திட்டத்தில் இளம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிஜி, கயானா, மொரிஷியஸ், போர்த்துகல், தென்னாபிரிக்கா, இலங்கை, சூரினாம் மற்றும் திரினிடாட் மற்றும் டொபாகோ ஆகியவற்றிலிருந்து 40 பங்கேற்பாளர்கள் (24 பெண் மற்றும் 16 ஆண்களும்) பங்கேற்கின்றனர். மகாராஷ்டிரா மற்றும் டாமன் & டையூ ஆகியோர் இந்த பதிப்பகத்தின் கூட்டாளிகள்.
  • 18-30 வயதிற்கு உட்பட்ட இந்தியாவின் புலம்பெயர்ந்த இளைஞர்களுக்கு நம் நாட்டினால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் சாதனைகளைப் பயன்படுத்தி அவர்களை தங்கள் முன்னோர்களின் தாய்நாட்டிற்கு அருகில் கொண்டுவரும் நோக்கத்துடன் “இந்தியாவை அறிவோம் திட்டத்தை” இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

பிரதான் மந்திரி ஆரோக்யா யோஜனா

  • இதுவரை 14 ஆயிரம் மருத்துவமனைகள் பிரதான் மந்திரி ஆரோக்யா யோஜனாவின் கீழ் இணைந்துள்ளது. அதிகபட்சமாக குஜராத்தில் 2677 மருத்துவமனைகளும், தமிழ்நாட்டில் 1709 மருத்துவமனைகளும் உள்ளன. 

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நிதி சேர்த்தலில் விவசாயிகளை சேர்க்கும் பிரச்சாரத்தை துவக்க அரசு திட்டம்

  • கிசான் கிரெடிட் கார்ட்ஸ் (KCC) திட்டத்தின் கீழ் நிதி சேர்த்தலில் விவசாயிகளை சேர்க்கும் ஒரு பிரச்சாரத்தை அரசு துவக்க முடிவு செய்துள்ளது. 

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

e-NAM தளம்

  • கடந்த மாதம் 30ம் தேதி வரை e-NAM தளம் மூலம் சுமார் 35 ஆயிரம் விவசாயிகளுக்கு முன்னூறு கோடி ரூபாய் பணம் செலுத்தியுள்ளது.

PDF Download

ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

ஜனவரி 2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!