நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 01 2019

0

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 01 2019

தேசிய செய்திகள்

குஜராத்

குஜராத் அரசு 9.61 லட்சம் ஊழியர்களின் டி..வை உயர்த்தியது

 • குஜராத் அரசு61 லட்சம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் அகவிலைப்படி(டிஏ)வை 2 சதவிகிதம் உயர்த்தியது. 

சர்வதேச செய்திகள்

கானா மீது அமெரிக்கா விசா கட்டுப்பாடுகள் விதித்தது

 • அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாழும் கானா மக்களை நாடு கடத்துவது தொடர்பான பிரச்சனை காரணமாக வாஷிங்டன் கானா நாட்டின் மீது விசா கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தது. கானா நாட்டைச் சேர்ந்த சுமார் 7,000 பேர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாழ்கின்றனர்.

ஈரானிய புரட்சியின் 40 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • ஈரானிய புரட்சியின் 40 வது ஆண்டு விழாவை கொண்டாட தெஹ்ரானில் இஸ்லாமிய குடியரசின் நிறுவனர் அயத்தொல்லா ருஹொல்லாஹ் கொமேனி சமாதியில் ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் கூடினர்.

மேலும் ஒரு ஆண்டுக்கு CARக்கு எதிரான தடைகளை நீட்டிக்க நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்

 • மத்திய ஆபிரிக்க குடியரசு (CAR) மீது மேலும் ஒரு ஆண்டு தடை விதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு இலங்கை பாராளுமன்றத்தில் தீர்மானம்

 • இலங்கையில், பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் ஒரு தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான தீர்மானம் ஒன்றை கொண்டுவந்துள்ளது.

ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகியவை ஈரானுடன் பரிவர்த்தனை சேனலை அமைத்தன

 • ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகியவை ஈரானுடன் INSTEX எனப்படும் ஒப்பந்த சேனலை நிறுவியுள்ளன. இது வர்த்தகத்தைத் தொடரவும் மற்றும் அமெரிக்க பொருளாதாரத் தடைகளை தடுக்கவும் உதவுகிறது.
 • அதே நேரத்தில், INSTEX எனப்படும் புதிய நிறுவனம், மூன்று நாட்டின் திட்டமாகும், இது அனைத்து 28 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களின் முறையான அங்கீகாரத்தைப் பெறும்.

வணிகம் & பொருளாதாரம்

ஜிஎஸ்டி வசூல் ரூ .1 லட்சம் கோடியைக் கடந்தது

 • இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் ஜி.எஸ்.டி. வசூல் ஒரு லட்சம் கோடியை கடந்தது.
 • கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் 89 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது.

இடைக்கால பட்ஜெட் 2019-20

 • நிதி அமைச்சர் பியுஷ் கோயல் பாராளுமன்றத்தில் 2019-20க்கான இடைக்கால பட்ஜெட்டை வழங்கினார்.

2019-20 இடைக்கால நிதிநிலை அறிக்கை சிறப்பம்சங்கள்

 • பிரதமரின் கிஸான் திட்டத்தின் கீழ் 12 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வருமானம் கிடைக்க உத்தரவாதம்.
 • அமைப்பு சாரா தொழிலில் ஈடுபட்டுள்ள 10 கோடி தொழிலாளர்களுக்கு நிலையான மாதாந்திர ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்ய பிரதமரின் ஷ்ரம் யோகி மான்தன் திட்டம்.
 • மாதம் ரூ.100/55 என்ற குறைந்த அளவிலான பங்களிப்பைச் செலுத்தும் தொழிலாளர்கள் 60 வயதை கடந்த பிறகு மாதம் ரூ.3,000 ஓய்வூதியமாக வழங்கப்படும்.
 • ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு முழு வரி விலக்கு. வருமானவரிக்கான நிரந்தரக் கழிவுத்தொகை ரூ.40,000-லிருந்து ரூ.50,000-ஆக உயர்த்தப்படும்.
 • 2019-20ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு ரூ.60,000 கோடி ஒதுக்கீடு.
 • வங்கி / அஞ்சலக முதலீடுகள் மூலம் வட்டியாக பெறப்படும் தொகைக்கு வரிச்சலுகை பெறுவதற்கான உச்சவரம்பு ரூ.10,000-லிருந்து ரூ.40,000-ஆக அங்கீகரிக்கப்படும்.
 • பசுமாடுகளின் நீடித்த இனவிருத்தி மேம்பாட்டிற்காக ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.
 • 5 கோடி மீனவர்களின் நலனுக்காக மீன்வளத்துக்கென தனித்துறை உருவாக்கப்படும்.
 • 22ஆவது எய்ம்ஸ் மருத்துவமனை ஹரியானாவில் அமைக்கப்படும்.
 • 2019-20-க்கான நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தி வீத்த்தில்4%ஆக இருக்கும். 3% நிதிப்பற்றாக்குறை என்ற இலக்கு 2020-21-ல் எட்டப்படும்.
 • மின்சார வசதியை பெற விரும்பும் அனைத்து வீடுகளுக்கும் 2019 மார்ச்சுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும். சௌபாக்யா திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் இலவச மின் இணைப்பு.
 • பிரதமரின் கிராமச்சாலை திட்டத்தின் கீழ், அமைக்கப்படும் கிராமப்புற சாலைகளின் அளவு மும்மடங்காக அதிகரிப்பு.
 • 2018-19 நிதி ஒதுக்கீட்டில் 21% அதிகரிக்கப்பட்டு 2019-20-ல் ரூ.58,166 கோடியாக நிர்ணயம்.
 • அருணாச்சலப்பிரதேச மாநிலம் அண்மையில் விமான போக்குவரத்து வசதியை பெற்றுள்ளது.
 • பிரம்மபுத்திரா ஆற்றில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தி சரக்குப்போக்குவரத்து தொடங்கப்படும்.
 • முதன் முறையாக ராணுவத்திற்கான ஒதுக்கீடு ரூ.3,00,000 கோடியை தாண்டியுள்ளது.
 • இதுவரை அடையாளம் காணப்படாத சீர் மரபின நாடோடிகள் மற்றும் நாடோடி பழங்குடியினரை அடையாளம் காண நிதி ஆயோக்கின் கட்டுப்பாட்டில் புதிய குழு ஒன்று உருவாக்கப்படும்.
 • இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஒற்றைச் சாளர அனுமதியைப் பெறவும், படப்பிடிப்பை எளிதாக்கவும் நடவடிக்கை.
 • ஜிஎஸ்டி சட்டத்தில் பதிவு செய்த சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பெறும் ரூ.1 கோடி வரையிலான கடனுக்கு 2% வட்டி தள்ளுபடி. ஒரு மணி நேரத்திற்குள் ரூ.1 கோடி வரை கடன் வசதி பெற ஏற்பாடு.
 • நாட்டில் உள்ள 1 லட்சம் கிராமங்கள் அடுத்த ஐந்தாண்டுகளில் டிஜிட்டல் கிராமங்களாக மாற்றப்படும்.
 • செயற்கைப் புலனாய்வுக்கான தேசிய திட்டத்திற்கு உறுதுணையாக செயற்கைப் புலனாய்வு நுழைவாயில் ஒன்று புதிதாக ஏற்படுத்தப்படும்.
 • பிரதமரின் கவுசல் விகாஸ் திட்டத்தின் கீழ் 1 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு திறன் பயிற்சி.

நியமனங்கள்

 • குப்தேஷ்வர் பாண்டே – பீகாரின் புதிய தலைமை காவல் இயக்குனர் (டிஜிபி)

திட்டங்கள்

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி

 • சிறு மற்றும் குறு விவசாயிகள் வருமான ஆதரவை வழங்க பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
 • சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வருடந்தோறும் 6,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இது வருடாந்தரம் அரசுக்கு கூடுதலாக 75,000 கோடி ரூபாய் செலவாகும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

6 நீர்மூழ்கிக் கப்பல்களின் உள்நாட்டு கட்டமைப்புக்கு பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்

 • பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் [DAC], 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களின் உள்நாட்டு கட்டுமானத்திற்கு ஒப்புதல் அளித்தது.
 • அமைச்சகத்தின் முக்கிய மூலோபாய கூட்டு மாதிரித் திட்டத்தின் கீழ் அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இரண்டாவது திட்டம் இதுவாகும்.

விளையாட்டு செய்திகள்

200 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் மகளிர் கிரிக்கெட் வீராங்கணை

 • இந்திய கேப்டன் மித்தாலி ராஜ் 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் முதல் பெண் கிரிக்கெட் வீரர் எனும் சாதனை படைத்தார்.

இந்தியா Vs நியூசிலாந்து ஒருநாள் தொடர்

 • ஹாமில்டனில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து இந்தியாவை வென்றது. முதல் இரண்டு போட்டியில் வென்றதால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

PDF Download

ஜனவரி மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here