ஏப்ரல் 5 – நடப்பு நிகழ்வுகள்

0

தமிழகம்

தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்

  • சென்னை – மதுரை இடையே இரட்டை பாதை பணி நிறைவடைந்துள்ளதால், தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்.
  • தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு விரைவில் பகல் நேர ரயில் ஒன்று இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குல்ஷிரேஸ்தா தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு 

  • பிளஸ் 2 பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைகிறது.
  • இதைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்குகிறது.

கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

  • தாம்பரத்தில் இருந்து ஏப்ரல் 9-ம் தேதி முதல் ஜூன் 27-ம் தேதி வரையில் வாரம் இருமுறை (திங்கள், புதன்கிழமைகளில்) சிறப்பு ரயில்கள் கொல்லத்துக்கு இயக்கப்படும்.
  • இதேபோல், கொல்லத்தில் இருந்து ஏப்ரல் 10-ம் தேதி முதல் ஜூன் 28-ம் தேதி வரையில் (செவ்வாய், வியாழன்களில்) தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

 ஐஓபி வட்டி விகிதம் குறைப்பு

  • சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) வட்டி விகிதங்களை குறைத்துள்ளது.

இந்தியா

மத்திய வேளாண் துறை அமைச்சர் தகவல்

  • பொது விநியோகத் திட்டத்தில் சோளம், கம்பு, கேழ்வரகு உட்பட சிறுதானியங்களை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

ரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை 

  • கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தின் பைராபுராவில் இருந்து 62 அடி உயரம் உள்ள‌ பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் சிலையை,பெங்களூருவுக்கு கொண்டு செல்லும் பணிகள் தொடங்கின.

உலகம்

8.7 கோடி ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் 

  • இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திற்கு, ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து 8.7 கோடி பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் முறையற்ற வகையில் பகிரப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

வணிகம்

ஆம்பி தலைவர் தகவல்

  • 2017 ஆண்டில் புதிதாக 32 லட்சம் முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்திருக்கிறார்கள் என இந்திய மியூச்சுவல் பண்ட் சங்கங்களின் தலைவர் (ஆம்பி) ஏ.பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

`3 நாட்களில் 17 லட்சம் இ-வே பில் உருவாக்கம்’

  • ஏப்ரல் 1-ம் தேதி முதல் சரக்கு மின் வழி ரசீது (இ-வே பில்) முறை அமல்படுத்தப்பட்டது.
  • கடந்த மூன்று நாட்களில் 17 லட்சம் இ-வே பில்கள் உருவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

விளையாட்டு

21-வது காமன்வெல்த் போட்டி

  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21-வது காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதல் போட்டியின் பெண்கள்  பிரிவில் இந்தியாவின் மீரா பாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்.

ஸ்டார் இந்தியா

  • இந்திய கிரிக்கெட்டின் உலகம் முழுதுக்குற்மான ஒளிபரப்பு, டிஜிட்டல் உரிமைகளை ரூ.6138 கோடிக்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.
  • 2018-2023 வரைக்குமான ஒப்பந்தமாகும் இது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!