ஏப்ரல் 21 மற்றும் 22 நடப்பு நிகழ்வுகள்

0

மாநிலசெய்திகள்

தமிழ்நாடு

தமிழகத்தில் சாலை பாதுகாப்பு வார விழா

 • தமிழகத்தில் சாலை பாதுகாப்பு வார விழா ஏப்ரல் 23 முதல் ஒரு வாரம் நடக்கிறது. மாணவர்கள், டிரைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு அளிப்பதற்காக நடத்தப்படுகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நுண்ணறிவு போக்குவரத்து ஒழுங்குமுறை

 • சென்னை மாநகரத்தில் சாலைப் பாதுகாப்பு மற்றும் பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ‘நுண்ணறிவு போக்குவரத்து ஒழுங்கு முறை’ என்ற திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
 • இத்திட்டத்தின்கீழ், பேருந்து நிலையங்கள் மற்றும் நிறுத்தங்களில் மாநகரப் பேருந்துகள் எத்தனை மணிக்கு வருகின்றன, எங்கே வந்துக்கொண்டிருக்கின்றன என்பதை பெரிய திரைகள் மற்றும் ஒலி வடிவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தெரிவிக்கும் வசதி கொண்டுவரப்பட உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மின்னணு ‘இ-ஸ்டாம்பிங்’ மூலம் முத்திரைக் கட்டணம் செலுத்தும் திட்டம்

 • வழக்குகளை எளிதாக தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மின்னணு இ-ஸ்டாம்பிங் மூலம் நீதிமன்ற கட்டணம் செலுத்தும் திட்டத்தை முதல்வர் கே.பழனிசாமி, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

குஜராத்

குஜராத்தில் நிலநடுக்கம்: ரிக்ட்ர் அளவுகோலில் 3.7

 • குஜராத்தில் லேசான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டர் அளவுகோலில்7 ஆக பதிவாகி உள்ளது.இந்நிலநடுக்கம் தெதியப்படா, சாக்பரா மற்றும் ராஜ்பிப்லா ஆகிய பகுதிகளில் உணரப்பட்டது.இது காந்திநகரில் இருந்து தெற்கே 213 கி.மீட்டர் தொலைவில் பரூச் அருகே மையம் கொண்டுள்ளது.

தெலுங்கானா

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு ஒப்புதல்

 • தெலுங்கானாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து கடிதம் வழியே அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது.   எய்ம்ஸ் மருத்துவமனை தவிர்த்து மஹபூப்நகர் மற்றும் சித்திபேட் ஆகிய பகுதிகளில் 2 மருத்துவ கல்லூரிகள் அமைவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.  மத்திய அரசின் பிரதம மந்திரி ஸ்வஸ்தியா சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் இந்த மருத்துவமனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தேசிய செய்திகள்

பனாமா நாட்டு இந்திய தூதர் ரவி தபருக்கு கூடுதல் பொறுப்பு

 • பனாமா நாட்டின் இந்திய தூதராக இருப்பவர் ரவி தபர்.அவருக்கு நிகாராகுவா நாட்டின் இந்திய தூதராக பதவி வகிக்கும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான திட்டம் மறுசீரமைப்பு

 • நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ‘ராஷ்ட்ரீய கிராம சுவராஜ் அபியான்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.இந்த திட்டத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு நேற்று ஒப்புதல் அளித்தது.
 • உள்ளாட்சி அமைப்புகளில் உள் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், மின்னணு நிர்வாகம் செய்தல் உள்ளிட்டவைக்கு வழிவகை செய்வதே இந்த மறுசீரமைப்பின் நோக்கம் ஆகும்.

சர்வதேசசெய்திகள்

ஷங்காய் கூட்டுறவு மாநாடு

 • சீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டம் ஏப்ரல் 24-ம் தேதி ஷங்காய் நகரில் நடைபெறுகிறது. ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ்  பங்கேற்கவிருக்கிறார்.

அரியவகை தாது அடங்கிய தீவு :ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

 • ஜப்பானின் டோக்கியா நகரின் தென்கிழக்கில் 1,150 மைல்கள் தொலைவில் உள்ளது மினாமி தொரிசிமா ஜப்பான் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தீவில் சுமார் 16 மில்லியன் டன் அரியவகை உலோகங்கள் கொட்டிக் கிடப்பதாக ஜப்பான் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 • ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள், ரேடார் சாதனங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகள் என பலவற்றையும் குறித்த தீவில் இருந்து கிடைக்கும் உலோகங்களால் உருவாக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட அரிய உலோகங்களில் ஒன்று இயிற்றியம் (Yttrium). இதன் தற்போதை சந்தை மதிப்பானது பவுண்ட் ஒன்றுக்கு 3,400 டாலராகும். இயிற்றியம் உலோகத்தால் மொபைல்போன் திரைகள் மற்றும் கேமிரா லென்ஸ்கள் தயாரிக்கலாம்.

உலகின் மிகவும் முதிய மூதாட்டி 117-வது வயதில் காலமானார்

 • உலக சாதனைகளை பதிவு செய்துவரும் கின்னஸ் புத்தகத்தில் உலகின் மிகவும் முதிய மூதாட்டியாக இடம்பிடித்து இருந்தவர் நபி தஜிமா.ஜப்பான் நாட்டை சேர்ந்த இவர் 4-8-1900 அன்று பிறந்தார். ஜப்பான் நாட்டின் தென்பகுதியில் உள்ள கிக்காய் நகரில் வாழ்ந்துவந்த நபி தஜிமா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று நபி தஜிமா உயிரிழந்துள்ளார்.

அசர்பைஜான் நாட்டின் புதிய பிரதமர்: நோர்வுஸ் மாமேடோவ்

 • அசர்பைஜான் நாட்டின் அதிபராக இல்ஹாம் அலியேவ் பொறுப்பேற்றுள்ளார். அதிபரின் வெளியுறவு கொள்கை ஆலோசகராக பணியாற்றிவந்த நோர்வுஸ் மாமேடோவ் என்பவரை புதிய பிரதமராக நியமிக்க அசர்பைஜான் நாட்டின் பாராளுமன்றம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

வணிகசெய்திகள்

ஜன் தன் வங்கிக் கணக்கு: ரூ.80 ஆயிரம் கோடியைக் கடந்தது

 • ‘ஜன் தன்’ வங்கிக்கணக்குகளில் டெபாசிட் தொகை ரூ.80 ஆயிரம் கோடியைக் கடந்துள்ளது, இன்னும் அதிகமான மக்கள் இந்த வங்கிக்கணக்குகளில் ஆர்வத்துடன் சேர்ந்து வருகின்றனர் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • ஏழைமக்களுக்கும் அரசின் சமூக நலத்திட்டங்கள் மூலம் மானியத்தொகையை பரிமாற்றம் செய்வதற்காக பிரதமர் மோடியால் ஜன்தன் வங்கிக்கணக்கு தொடங்கிவைக்கப்பட்டது. இந்த சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள் குறைந்த பட்ச இருப்பு வைக்கத் தேவையில்லை.

உலகத்தின் மொத்த கடன் 164 லட்சம் கோடி டாலர்: சர்வதேச செலாவணி நிதியம்

 • உலகத்தின் மொத்த கடன் தொகை 164 லட்சம் கோடி டாலரை தொட்டுள்ளதாக சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது. உலக பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வது மற்றும் நிதி அமைப்பில் இறுக்கமான சூழல் ஏற்பட்டால் கடனைத் திருப்பிச் செலுத்துதல் போன்றவை இதனால் கடினமாகும் எனவும் சர்வதேச செலாவணி நிதியம் தெரிவித்துள்ளது.

விளையாட்டுசெய்திகள்

மான்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ்:  11-வது முறையாக நடால் சாம்பியன்

 • மான்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ் மொனாகோவில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் நடால் 6-3, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். மான்டே கார்லோ மாஸ்டர் பட்டத்தை 11-வது முறையாக நடால் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக நடால் இத்துடன் 31 மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

கிரெனடா இன்விடேஷனல்:100 மீட்டர் ஓட்டத்தில் ஜஸ்டின் காட்லின் முதலிடம்

 • வெஸ்ட் இண்டீஸில் உள்ள கிரெனடாவின் கிரானி ஜேம்ஸ் ஸ்டேடியத்தில் கிரெனடா இன்விடேஷனல் ட்ரக் பந்தயம் நடைபெற்றது. இதில் 100 மீட்டர் ஓட்டத்தில் ஜஸ்டின் காட்லின் பந்தய தூரத்தை11 வினாடிகளில் கடந்து முதல் இடத்தை பிடித்தார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here