பெரிய வெங்காயத்தின் விலை அதிரடி உயர்வு – கிலோ ரூ. 54-க்கு விற்பனை!
தமிழகத்தில் சின்ன வெங்காயத்தை தொடர்ந்து பெரிய வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கிலோ ரூ. 50-க்கும் மேல் விற்பனையாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வெங்காயத்தின் விலை:
இந்தியாவில் பெய்து வரும் பருவ மழை காரணமாக அறுவடை காலதாமதம் ஆகிறது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரும் வெங்காய மூடைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அத்துடன் தற்போது வடமாநிலங்களில் தசரா விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவதால் அங்கிருந்து வரும் வெங்காயத்தின் வரத்தும் குறைந்துள்ளது. அதன் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து தற்போது சில்லறை விற்பனையில் ஒரு கிலோ ரூ. 130 வரை விற்பனையாகி வருகிறது.
எந்தெந்த வங்கியில் எவ்வளவு பணம் இருக்கு? இப்படி கண்டுபிடியுங்க!!
சின்ன வெங்காயத்தை தொடர்ந்து தற்போது பெரிய வெங்காயத்தின் விளையும் அதிரடியாக உயர்ந்துள்ளது கடந்த வாரம் ஒரு கிலோ வெங்காயம் ரூ.34 விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.54 ஆக உயர்ந்துள்ளது வெளிமார்க்கெட்டில் 70 வரைக்கும் விற்பனையாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.