‘ஆரம்பிக்கலாமா’ மிரட்டலாக வெளியான பிக் பாஸ் 5 டீஸர் – விக்ரம் லுக்கில் கமல்!

0
'ஆரம்பிக்கலாமா' மிரட்டலாக வெளியான பிக் பாஸ் 5 டீஸர் - விக்ரம் லுக்கில் கமல்!
'ஆரம்பிக்கலாமா' மிரட்டலாக வெளியான பிக் பாஸ் 5 டீஸர் - விக்ரம் லுக்கில் கமல்!
‘ஆரம்பிக்கலாமா’ மிரட்டலாக வெளியான பிக் பாஸ் 5 டீஸர் – விக்ரம் லுக்கில் கமல்!

விஜய் தொலைக்காட்சியின் மிக முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘பிக்பாஸ்’ தற்போது 5 ஆவது சீசனாக ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டுள்ள ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் முதல் டீஸர் இன்று (ஆகஸ்ட் 31) வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் டீஸர்

மக்கள் மத்தியில் ஸ்டார்டம் என்ற பெயரை பெற்றுள்ள ஒரு முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கிட்டத்தட்ட 4 சீசன்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதாவது ஆங்கில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பிக்டாடி என்ற நிகழ்ச்சியை தழுவி தமிழ் மொழியில் எடுக்கப்பட்டது தான் இந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி. இந்த ஷோ கிட்டத்தட்ட 12 சீசன்களை கடந்து ஹிந்தி மொழியில் வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதே போல 4 ஆண்டுகளுக்கு முன்னாக தமிழில் துவங்கிய பிக்பாஸ் ஷோ இந்த ஆண்டிலும் 5 ஆவது சீசனாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.

செப்டம்பர் மாதம் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை – பொதுமக்கள் கவனத்திற்கு!

இந்த சீசனையும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கிறார். அந்த வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான கமல், சூர்யா என்பவர்களை தொகுப்பாளர்களாக மாற்றிய பெருமையும் விஜய் டிவியயே சாரும். இதனிடையே கடந்த சில நாட்களாக பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியது. இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் டீஸர் இன்று (ஆகஸ்ட் 31) வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதில் கமல்ஹாசன் எப்போதும் போல, வழக்கமான சர்காஸ்டிக் பார்வையுடன், ‘ஆரம்பிக்கலாமா’ என்று கேட்பது போல மிரட்டலான டீஸர் வெளியாகியுள்ளது. தற்போது ‘விக்ரம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் கமல், அதே லுக்குடன் மஞ்சள் நிற உடையணிந்து டீஸரில் தோன்றியுள்ளார். இதனுடன் சீசன் 5ல் கலந்து கொள்ள இருப்பவர்கள் என சிலரது பெயர்கள் அவ்வப்போது வலைதளங்களில் அடிபட்டு வருகிறது. ஆனால் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது தான் இதன் உண்மை நிலவரம் வெளியாகும். வழக்கம் போல இந்த சீசனிலும் சண்டை, காதல், நட்பு, பாசம் என நவரசமும் வெளிப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!