பிக் பாஸ் அல்டிமேட்டில் களமிறங்கும் ஜூலி – ஹோட்டல் அறையில் தனிமை, ரசிகர்கள் உற்சாகம்!

0
பிக் பாஸ் அல்டிமேட்டில் களமிறங்கும் ஜூலி - ஹோட்டல் அறையில் தனிமை, ரசிகர்கள் உற்சாகம்!
பிக் பாஸ் அல்டிமேட்டில் களமிறங்கும் ஜூலி - ஹோட்டல் அறையில் தனிமை, ரசிகர்கள் உற்சாகம்!
பிக் பாஸ் அல்டிமேட்டில் களமிறங்கும் ஜூலி – ஹோட்டல் அறையில் தனிமை, ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. அதற்காக முதல் சீசனில் கலந்து கொண்ட ஜூலி ஹோட்டல் ரூமில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பது போல வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பிக்பாஸ் ஜூலி:

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு மாறுபட்ட ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சி 100 நாட்களுக்கு நடத்தப்படும் நிலையில் அதில் 18 போட்டியாளர்களை ஒரே வீட்டிற்குள் வைத்து அவர்களுக்கு டாஸ்குகள் கொடுக்கப்படும். அதில் மக்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார். இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக ஓடி முடிவடைந்துள்ளது. அதில் பலர் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு பிக் பாஸ் சீசன் 5 நடந்தது.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகும் முல்லை காவ்யா? புதிய படத்தில் கமிட்!

அதில் 18 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில் அவர்களில் ராஜு மக்களின் அதிகமான வாக்குகளுடன் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் இரண்டாவது இடத்தை விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா பிடித்தார். சென்ற வாரம் இந்த சீசனில் இறுதி சுற்று நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் தொடங்க இருப்பதாகவும், அதில் இதுவரை பிக்பாஸ் சீசன்களில் கலந்து கொண்ட சிறந்த போட்டியாளர்கள் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருமண பந்தத்தில் இணையும் சின்னத்திரை காதல் ஜோடி தீபக், அபிநவ்யா- ரசிகர்கள் வாழ்த்து!

மேலும் இந்த நிகழ்ச்சி வருகிற 30 ஆம் தேதி தொடங்க இருப்பதால் இன்று மாலை 6 மணி முதல் போட்டியாளர்கள் யார் என்பது குறித்து தகவல் வெளியாக இருக்கிறது. அதற்காக பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்டு சர்ச்சைகளை கிளப்பிய ஜூலி தற்போது பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் ஹோட்டல் ரூமில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பது போல வீடியோ வெளியானதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!