Jio Phone Next அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம் – தீபாவளி முதல் விற்பனை! EMI முழு விபரம் இதோ!

0
Jio Phone Next அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம் - தீபாவளி முதல் விற்பனை! EMI முழு விபரம் இதோ!
Jio Phone Next அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம் - தீபாவளி முதல் விற்பனை! EMI முழு விபரம் இதோ!
Jio Phone Next அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம் – தீபாவளி முதல் விற்பனை! EMI முழு விபரம் இதோ!

முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ புதிதாக ஜியோ போன் நெக்ஸ்ட் என்னும் மலிவு விலை போனை விற்பனை செய்ய உள்ளது. இந்த மொபைல் போனை EMI மூலம் பெறுவது குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஜியோ போன் நெக்ஸ்ட்:

முன்னணி தொலை தொடர்பு நிறுவனமாக இயங்கி வரும் ஜியோ நிறுவனம் தற்போது புதிய மொபைல் போனை அறிமுகப்படுத்துகிறது. ஜியோ நிறுவனத்தின் வருகையால் இன்டர்நெட் பயன்படுத்தும் அளவு அதிகமாகியுள்ளது. அதனை தொடர்ந்து ஜியோ நிறுவனம் பட்டன் போன் ஒன்றை அறிமுகம் செய்தது. தற்போது இந்திய மொபைல் போன் மற்றும் மொபைல் நெட்வொர்க் சந்தையில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கி வருகிறது ஜியோ நிறுவனம்.

நீட் UG தேர்வு முடிவுகள் 2021 – விரைவில் ஸ்கோர் கார்டு வெளியீடு! மாணவர்கள் எதிர்பார்ப்பு!

அதனை தொடர்ந்து ஜியோ போன் நெக்ஸ்ட் என மலிவு விலையில் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்கிறது ஜியோ நிறுவனம். வாடிக்கையாளர்கள் ரூ.1,999 க்கு ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை வாங்க முடியும். மாதம் ரூ.300 முதல் EMI சலுகையும் உண்டு. இந்த ஜியோ போன் நெக்ஸ்ட் இந்தியாவில் ரூ.6,499 க்கு விற்பனை செய்யவுள்ளது. ஆரம்பத்தில் ரூ.1,999 செலுத்தி மீதமுள்ள தொகையை EMI மூலம் செலுத்திக் கொள்ளலாம். இந்த மொபைல் போனானது தீபாவளி முதல் சந்தையில் விற்பனைக்கு வருகிறது.

இந்த மொபைல் போனை ஜியோ மார்ட் டிஜிட்டல் ரீடெய்லரை அணுகி பெற்றுக்கொள்ள முடியும். அதேபோல் இணையத்தின் வழியாகவும் பெற்றுக்கொள்ள முடியும். EMI திட்டங்கள் 18 மாதங்கள் மற்றும் 24 மாதங்களுக்கு வழங்கப்படுகின்றன. இதில் பல்வேறு பலன்களும் உண்டு.

ஆல்வேஸ் ஆன் பிளான்:

இந்த திட்டத்திற்கு 24 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.300 அல்லது 18 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.350 செலுத்த வேண்டும். அதனுடன் பயனர்களுக்கு 5GB டேட்டா மற்றும் 100 நிமிட அழைப்பு நன்மைகளும் வழங்கப்படுகிறது.

லார்ஜ் பிளான்:

இந்த திட்டத்திற்கு 24 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.450 அல்லது 18 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.500 செலுத்த வேண்டும். அதனுடன் பயனர்களுக்கு தினமும் 1.5GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் நன்மைகளும் வழங்கப்படுகிறது.

எக்ஸ்எல் பிளான்:

இந்த திட்டத்திற்கு 24 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.500 அல்லது 18 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.550 செலுத்த வேண்டும். அதனுடன் பயனர்களுக்கு தினமும் 2GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் நன்மைகளும் வழங்கப்படுகிறது.

எக்ஸ் எக்ஸ் எல் பிளான்:

இந்த திட்டத்திற்கு 24 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.550 அல்லது 18 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.600 செலுத்த வேண்டும். அதனுடன் பயனர்களுக்கு தினமும் 2.5 GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் நன்மைகளும் வழங்கப்படுகிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து EMI திட்டங்களைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் செயலாக்கக் கட்டணமாக ரூ.501 செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!