ஹேமாவை பிரிந்து தவிக்கும் கண்ணம்மா, சௌந்தர்யாவிடம் வருத்தத்துடன் பேசும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
ஹேமாவை பிரிந்து தவிக்கும் கண்ணம்மா, சௌந்தர்யாவிடம் வருத்தத்துடன் பேசும் பாரதி - இன்றைய
ஹேமாவை பிரிந்து தவிக்கும் கண்ணம்மா, சௌந்தர்யாவிடம் வருத்தத்துடன் பேசும் பாரதி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
ஹேமாவை பிரிந்து தவிக்கும் கண்ணம்மா, சௌந்தர்யாவிடம் வருத்தத்துடன் பேசும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா ஹேமாவை பிரிந்து வருத்தத்தில் இருக்கிறார். அப்போது ஹேமா அம்மா என்று கூப்பிடுவது போல நினைத்து பார்க்கிறார். இந்நிலையில் ஹேமாவை கண்ணம்மா ஏன் கொஞ்சினார் என பாரதி சௌந்தர்யாவிடம் கேட்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா ஹேமா நினைப்பாகவே இருக்க, கடவுளிடம் என் மகள் பிறந்த போது எப்படி இருப்பாள் என்பது கூட எனக்கு தெரியாது. இப்போது 7 வருஷம் கழித்து என்னிடம் அவள் கிடைத்து இருக்கிறாள். அவளை என்னிடம் சேர்த்துவிட்டு என கெஞ்சுகிறார். பின் ஹேமா வந்து அம்மா என கூப்பிடுகிறார். ஹேமா நீங்க தான் என்னுடைய அம்மாவா என கேட்கிறார். உடனே கண்ணம்மா ஹேமாவை கட்டி அணைத்து கொஞ்ச அவள் மறந்துவிடுகிறாள்.

மறுபக்கம் சௌந்தர்யா பாரதி இருக்க, நீங்க சின்ன வயதில் மார்க் கம்மியாக எடுத்துவிட்டேன் என வீட்டிற்குவராமல் இருந்தேன். அப்போது நிஜத்தை பழகி கொள்ள வேண்டும் என நீங்க தான் எனக்கு சொல்லி கொடுத்தீங்க ஆனால் இப்போது நீங்களே மாறி மாறி நடந்துக் கொள்கிறீங்க என கேட்கிறார். நீ என்ன பேசுற பாரதி என சௌந்தர்யா கேட்க, அன்னைக்கு ஹேமா தோழியின் அப்பாவிற்கு நெஞ்சுவலி என நாங்க கிளம்பும் போது கண்ணம்மா எதற்கு வந்து ஹேமாவை அப்படி கொஞ்சுகிறார்.

தமிழகத்தில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் – வெளிமாநில தொழிலாளர்களுக்கு பொருட்கள்!

அவள் காரணம் இல்லாமல் வரமாட்டாள் என பாரதி கேட்கிறார். உடனே சௌந்தர்யா கண்ணம்மா மீது ஹேமா பாசமாக இருப்பது தான் உனக்கே தெரியுமே நீ கூட சில நாள் அவளை கொண்டு சென்று அவள் வீட்டில் விட்ட இப்போ தெரியாத மாதிரி கேட்கிறாய் என சொல்ல, பாரதி அவள் வந்துவிட்டு போனது, உங்க கையில் அடிபட்டது. எல்லாம் நம்புவது போல இல்லை. நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை என்னை சுற்றி என்ன நடக்கிறது என எனக்கு தெரியும் என சொல்கிறார்.

பின் பாரதி ஹேமா என்னை விட்டு பிரிந்து அந்த கண்ணம்மாவுடன் நெருக்கமாக இருப்பது போல எனக்கு தோணுகிறது என பாரதி சொல்கிறார். என்ன நடந்தாலும் நான் என் ஹேமாவை விட்டுக் கொடுக்க மாட்டேன் என பாரதி அழுகிறார். மேலும் ஹேமா என்னை பிரிந்தால் நான் உயிரோடு இருக்கமாட்டேன் என பாரதி சொல்கிறார். உடனே சௌந்தர்யா என்ன செய்வதென்று தெரியாமல் அழுகிறார். மறுபக்கம் வெண்பா கண்ணம்மா நினைப்பில் தூங்காமல் இருக்கிறார்.

அக்டோபர் 18 முதல் 9 -12 வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அனுமதி!

இரவெல்லாம் தூங்கும் போது கண்ணம்மா வந்து அடிப்பது போலவும் என் குழந்தை எங்கே என கேள்வி கேட்பது போலவும் அவருக்கு தோன்றுகிறது. பின் கண்ணம்மா சௌந்தர்யா எடுத்துக் கொடுத்த புடவையை கட்டிக் கொண்டு கிளம்ப லட்சுமி பாரதி எடுத்துக் கொடுத்த டிரஸ் போடுகிறார். பின் கண்ணம்மா கார் புக் பண்ண, லட்சுமி சந்தோசமாக இருக்கிறார். கண்ணம்மா இந்த காரில் நம்மகூட இன்னொருத்தவங்க வர போறாங்க, என கண்ணம்மா கேட்க, யாரு என லட்சுமி கேட்கிறார். உடனே கண்ணம்மா ஹேமாவும் நம்ம கூட வர போறா என சொல்ல லட்சுமி சந்தோசமாக இருக்கிறார். நம்ம சென்று ஹேமாவை அழைத்துக் கொண்டு கோவில் போவோம் என கிளம்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!