திருமணத்துக்கு தயாராகும் ‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி? வைரலாகும் புகைப்படம்!

0
திருமணத்துக்கு தயாராகும் 'பாரதி கண்ணம்மா' அஞ்சலி? வைரலாகும் புகைப்படம்!
திருமணத்துக்கு தயாராகும் 'பாரதி கண்ணம்மா' அஞ்சலி? வைரலாகும் புகைப்படம்!
திருமணத்துக்கு தயாராகும் ‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி? வைரலாகும் புகைப்படம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலி கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஸ்வீட்டி திருமண அலங்காரத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாக அஞ்சலிக்கு திருமணம் ஆகப்போகிறாதா என்ற குழப்பங்கள் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

நடிகை ஸ்வீட்டி

சமீப காலமாக விஜய் டிவி நட்சத்திரங்கள் பலர் திருமண பந்தத்துக்குள் அடியெடுத்து வைத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரத்தில் ‘ராஜா ராணி’ மற்றும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்களில் நடித்திருந்த நடிகை வைஷாலி தணிகா தனது நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார். இந்நிலையில் மீண்டுமாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலி கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஸ்வீட்டி திருமண அலங்காரத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் வருகையால் உருவாகும் அடுத்த பிரச்சனை – சீரியலில் அடுத்த ட்விஸ்டு!

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அஞ்சலிக்கு திருமணம் நடக்க போகிறதா என வலைதளங்களில் கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் இந்த புகைப்படங்கள் போட்டோஷூட்டுக்காக எடுக்கப்பட்டவை என்று தெரிய வந்துள்ளது. தற்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலியாக நடித்து வரும் நடிகை ஸ்வீட்டி சின்னத்திரை சீரியல்களுக்கு புதிய முகம் ஆவார்.

கண்ணம்மாவின் திட்டத்தால் வெண்பாவை கைது செய்த போலீசார், அதிர்ச்சியில் பாரதி – ப்ரோமோ ரிலீஸ்!

இந்த சீரியலின் ஆரம்பத்தில் சில நெகட்டிவ் ஷேடுடன் காட்டப்பட்டு வந்த இவரது கதாப்பாத்திரம் தற்போது பாசிட்டிவாக மாறி இருக்கிறது. தற்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பிரசவத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் அஞ்சலிக்கு விரைவில் குழந்தை பிறக்க இருக்கிறது. இந்நிலையில் வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ஸ்வீட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த விதமான புகைப்படங்கள் போட்டோஷூட்டுக்காக எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!