“பாரதி கண்ணம்மா” வெண்பா உடன் இணைந்து ஹேமா வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!

0
"பாரதி கண்ணம்மா" வெண்பா உடன் இணைந்து ஹேமா வெளியிட்ட வீடியோ - குவியும் லைக்குகள்!
“பாரதி கண்ணம்மா” வெண்பா உடன் இணைந்து ஹேமா வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!

“பாரதி கண்ணம்மா” சீரியல் தற்போது விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியல் வில்லி வெண்பா, ஹேமா உடன் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவி சீரியல்களில் மக்கள் மனம் கவர்ந்த நம்பர் 1 சீரியலாக பாரதி கண்ணம்மா சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் கதை நகர்ந்து வருகிறது. நீதிமன்ற உத்தரவின் படி பாரதி கண்ணம்மா சேர்ந்து வாழ தொடங்கி இருக்கின்றனர். மேலும் வில்லி வெண்பாவும் ஜெயிலில் இருந்து வந்திருக்கிறார். அதனால் கதையில் அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும் பாரதி கண்ணம்மாவின் 10வது திருமண நாள் வர இருக்கிறது.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா சாய் காயத்ரி சந்தித்த சவால்கள் – மனம் திறந்த நடிகை!

அதில் வீட்டில் பூஜை நடத்த சௌந்தர்யா ஏற்பாடு செய்திருக்கிறார். அன்றே அகில் குழந்தைக்கு பெயர் வைக்க இருக்கின்றனர். அதனால் அன்று வெண்பா என்ன குழப்பம் செய்ய போகிறார் என தெரியவில்லை. இதற்கிடையில் கண்ணம்மா பாரதியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என உறுதியாக இருக்கிறார். அதனால் கண்ணம்மா, பாரதியை பிரிக்க வெண்பாவின் திட்டம் பலிக்காமல் போவதில் சந்தேகம் இல்லை. இந்நிலையில் வெண்பாவாக நடிக்கும் பரீனா, ஹேமா கதாபாத்திரத்தில் நடிக்கும் லிஷா உடன் எடுத்த வீடியோ வெளியாகி இருக்கிறது.

அஷ்வின் & ‘செம்பருத்தி’ ஷபானா நடிப்பில் ‘செம்பருத்தி’ சீசன் 2? ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

இருவரும் ஒரே மாதிரி நடனம் ஆடி இருக்கின்றனர். அந்த வீடியோ பாரதி கண்ணம்மா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தற்போது குழந்தை பிறந்து ஓரு மாதம் மட்டுமே ஆன நிலையில் வெண்பா இப்படி நடனம் ஆடுவதை பார்த்து பலர் பாராட்டுகளை குவித்து வருகின்றனர். அவரை ஏகப்பட்ட ரசிகர்கள் இன்ஸ்டாவில் பாலோ செய்து வருகின்றனர். மேலும் லிசாவின் இந்த க்யூட் வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!