பாரதியையும், ஹேமாவையும் அமெரிக்கா செல்ல விடாமல் தடுப்பாரா கண்ணம்மா? வெளியான ப்ரோமோ!

0
பாரதியையும், ஹேமாவையும் அமெரிக்கா செல்ல விடாமல் தடுப்பாரா கண்ணம்மா? வெளியான ப்ரோமோ!
பாரதியையும், ஹேமாவையும் அமெரிக்கா செல்ல விடாமல் தடுப்பாரா கண்ணம்மா? வெளியான ப்ரோமோ!
பாரதியையும், ஹேமாவையும் அமெரிக்கா செல்ல விடாமல் தடுப்பாரா கண்ணம்மா? வெளியான ப்ரோமோ!

இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் புரோமோவில் பாரதியும், ஹேமாவும் அமெரிக்கா செல்ல புறப்படுகிறார்கள். இதனால் கண்ணம்மா மிகவும் வருத்தமடைகிறார். இந்நிலையில் பாரதியையும், ஹேமாவையும் அனுப்பி வைப்பாரா? அல்லது தடுப்பாரா? என்பதே இந்த வார எபிசோடாக உள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலியின் குழந்தையை கலைக்க சொல்லுகிறார் மருத்துவர். அதனை மறுத்த அஞ்சலி தனது கணவன் அகிலனுக்காக குழந்தையை பெற்றெடுப்பேன், எனவே குழந்தையை கலைக்க வேண்டாம் என கூறுகிறார். வீட்டிற்கு வந்ததும் தனது குழந்தையை நினைத்து வருந்துகிறார். அப்போது அகிலன் தன் ஆசையை அஞ்சலியிடம் கூறுகிறார். இதனை அஞ்சலி மிகவும் வருத்தத்துடன் பார்க்கிறார்.

உங்களது PF கணக்கில் பேலன்ஸ் தொகை எவ்வளவு உள்ளது? தெரிந்து கொள்ள எளிய வழிமுறை!

இதற்கிடையில் ஹேமாவை நினைத்து வீட்டில் அனைவரும் மிக வருத்தமாக உள்ளனர். மறுபுறம் கண்ணம்மா வீட்டில் லட்சுமி, ஹேமாவை சந்திக்க போவதாக கூறுகிறார். அதற்கு கண்ணம்மா மறுக்கிறார். பிறகு லட்சுமி அடம்பிடித்ததால் கண்ணம்மா ஹேமாவிற்காக வாழைப்பூ வடை, போண்டா செய்து அதனை லட்சுமியிடம் கொடுத்து அனுப்பி வைக்கிறார்.

இதனை அடுத்து வெளியான புரோமோவில் பாரதி தன் காரை சரிபார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது கண்ணம்மா அவ்வழியாக வர, கண்ணம்மாவை கூப்பிட்டு நாங்கள் அமெரிக்கா செல்லப் போகிறோம், இனி உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என் கூறுகிறார். அதற்கு கண்ணம்மா சிம்பிள் ஆக ‘ஆல் தி பெஸ்ட்’ என கூறிவிட்டு போகிறார். பிறகு அன்று இரவு கண்ணம்மா எழுந்து பாரதியை போக விடாமல் தடுக்க வேண்டும், ஹேமாவிற்கும் அது தான் நல்லது என்று நினைக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அடுத்த நாள் காலை பாரதியும் ஹேமாவும் கிளம்ப ரெடி ஆகின்றனர். இதனால் வீட்டில் அனைவரும் மிகவும் வருத்தத்துடன் உள்ளனர். ஹேமாவும் பாட்டியை கட்டி பிடித்து அழுகிறார். இதற்கிடையில் கண்ணம்மா பாரதியை அமெரிக்கா போக விடாமல் தடுக்க பாரதி வீட்டிற்கு வேகமாக செல்கிறார். ஆனால் ஏற்கனவே அவர்கள் கிளம்பி விட்டனர். தற்போது கண்ணம்மா பாரதியை போக விடாமல் தடுப்பாரா? என்பதே ட்விஸ்ட் ஆக உள்ளது. இதனை வரப்போகும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here