தமிழக காவல்துறை அதிகாரிகள் 15 பேருக்கு விருதுடன், ரூ.25,000 ரொக்கப் பரிசு – அரசு அறிவிப்பு!

0
தமிழக காவல்துறை அதிகாரிகள் 15 பேருக்கு விருதுடன், ரூ.25,000 ரொக்கப் பரிசு - அரசு அறிவிப்பு!
தமிழக காவல்துறை அதிகாரிகள் 15 பேருக்கு விருதுடன், ரூ.25,000 ரொக்கப் பரிசு - அரசு அறிவிப்பு!
தமிழக காவல்துறை அதிகாரிகள் 15 பேருக்கு விருதுடன், ரூ.25,000 ரொக்கப் பரிசு – அரசு அறிவிப்பு!

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தமிழக காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 15 காவல் அதிகாரிகளுக்கு விருது மற்றும் தங்கப்பதக்கத்துடன் ரூ.25,000 ரொக்கப் பரிசு வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

விருதுகள் அறிவிப்பு:

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய ஊழியர்களுக்கு, அரசு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் சுதந்திர தினத்தை ஒட்டி தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது, எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கம் மற்றும் ரூ.25,000 ரொக்கப் பரிசு வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பனை மரங்களை வெட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் – அரசு அறிவிப்பு!

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் பொது மக்கள் சேவையில் தன்னலமற்று, உன்னத சேவைகள் செய்த காவல் துறையை சேர்ந்த 5 அதிகாரிகளுக்கு இந்த ஆண்டுக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகளை பெற்று கொள்ளும் அதிகாரிகளின் பட்டியலின் படி, சென்னையை சேர்ந்த அமரேஷ் புஜாரி, இ.கா.ப, கூடுதல் காவல்துறை இயக்குநர், சென்னையை சேர்ந்த அ.அமல்ராஜ், இ.கா.ப, கூடுதல் காவல்துறை இயக்குநர்
தொழில்நுட்ப சேவைகள்.

சென்னை பெருநகர காவல் துறையை சேர்ந்த சு.விமலா, காவல் துணை ஆணையர் (நுண்ணறிவு பிரிவு), திருச்சியை சேர்ந்த ந. நாவுக்கரசன், காவல் ஆய்வாளர்,கோட்டை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு மற்றும் சென்னை பெருநகர காவல் துறையை சேர்ந்த பா.பிரேம் பிரசாத், தலைமை காவலர் 27845
(மத்திய குற்றப்பிரிவு) ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது. அதே நேரத்தில் புலன் விசாரிப்பு துறையில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த 10 காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வரின் சிறப்பு பணி பதக்கங்கள் கொடுக்கப்பட உள்ளன.

இந்த பதக்கங்களை பெற்றுக் கொள்பவர்களது விபரங்களை பொருத்தளவு, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வெ.செல்வி, காவல் ஆய்வாளர் (திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையம்), கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த க.சாந்தி, காவல் ஆய்வாளர் (குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை), நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ரவி, காவல் ஆய்வாளர் (கொமாரபாளையம் காவல் நிலையம்), கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த க.சாயிலெட்சுமி காவல் ஆய்வாளர் (நேசமணி நகர் வட்டம்), இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆ. அமுதா, காவல் ஆய்வாளர் (சத்திரக்குடி காவல் நிலையம்).

TN Job “FB  Group” Join Now

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வே.சந்தானலட்சுமி, காவல் ஆய்வாளர் (குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை), கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சு.சீனிவாசன், காவல் ஆய்வாளர் (திருநாவலூர் காவல் நிலையம்), கோவை மாவட்டத்தை சேர்ந்த மு.கனகசபாபதி, காவல் ஆய்வாளர்
(B2 ஆர்.எஸ்.புரம் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையம்), தென்காசி மாவட்டத்தை சேர்ந்த க.ஆடிவேல், காவல் ஆய்வாளர் (தென்காசி காவல் நிலையம்), சேலம் மாவட்டத்தை சேர்ந்த ப.ஆனந்த லட்சுமி, காவல் உதவி ஆய்வாளர் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!