சென்னையில் மெட்ரோ ரயில்கள் இன்று சனிக்கிழமை அட்டவணையின் படி இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ:
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மெட்ரோ சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள், அதில் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு விடுமுறை நாட்களில் குறிப்பிட்ட தின நாட்கள் அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024
எனவே காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 6 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்படும். அதுவே காலை 5 மணி முதல் 8 மணி வரையிலும், 11 மணி முதல் மதியம் 5 மணி வரையிலும் மற்றும் 8 மணியிலிருந்து 10 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் இரவு 10 மணியிலிருந்து 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.