Home Entertainment அறந்தாங்கி நிஷா விஜய் டிவி நட்சத்திரங்களுடன் இணைந்து வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

அறந்தாங்கி நிஷா விஜய் டிவி நட்சத்திரங்களுடன் இணைந்து வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

0
அறந்தாங்கி நிஷா விஜய் டிவி நட்சத்திரங்களுடன் இணைந்து வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!
அறந்தாங்கி நிஷா விஜய் டிவி நட்சத்திரங்களுடன் இணைந்து வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்!
அறந்தாங்கி நிஷா விஜய் டிவி நட்சத்திரங்களுடன் இணைந்து வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித் நடிப்பில் சில நாட்களுக்கு முன் வெளியான வலிமை படத்தை விஜய் டிவி நட்சத்திரங்கள் இணைந்து தியேட்டரில் பார்த்து செம ரகளை செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைராலாகி வருகிறது.

விஜய் டிவி நட்சத்திரங்கள்:

அஜித் ரசிகர்களின் இரண்டு ஆண்டுகால காத்திருப்பிற்கு பின் கடந்த 24 ஆம் தேதி அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான வலிமை படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பல சினிமா பிரபலங்கள் கூட இந்த படத்தை முதல் நாளில் திரையரங்கு சென்று பார்த்திருக்கின்றனர். தமிழ் சினிமாவில் இதுவரை இப்படி ஒரு படம் வந்ததே இல்லை என சொல்லும் அளவிற்கு படம் உள்ளது.

விஜய் டிவி “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் மணிமேகலைக்கு நடந்த விபரீதம் – நடுவர் செய்த காரியம்!

அஜித் செய்த பைக் ஸ்டண்ட் காட்சிகள் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. இந்நிலையில் இந்த படத்தை பார்க்க விஜய் டிவி நட்சத்திரங்கள் தியேட்டர் சென்று இருக்கின்றனர். அங்கே அவர்கள் செய்த ரகளைகளை அறந்தாங்கி நிஷா, தனது கருப்பு ரோஜா யூடுப் சேனலில் வெளியிட்டு இருக்கிறார். அவருடன் அர்ச்சனா, மைனா நந்தினி ஆகியோர் இருக்கின்றனர். மேலும் நந்தியின் கணவர் யோகேஷ் ஆகியோர் நிஷாவுடன் இணைந்து கலாய்த்தனர்.

கோர்ட்டில் இருந்து வந்த லெட்டரால் மாட்டிக் கொள்ளும் கோபி, சந்தேகத்தில் எழில் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

மாலில் படம் பார்த்த அவர்கள் அதன் பின் ஷாப்பிங் செய்தனர். அப்போது மேக்கப் போட்டு பார்த்த நிஷாவை கலாய்த்து தள்ளினார்கள். அவர்களுக்கு ஈடு கொடுக்கும் விதத்தில் நிஷாவும் அவர்களை பதிலுக்கு கலாய்த்தார், இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுடன் Mr and Mrs சின்னத்திரை டைட்டில் வின்னர் சரத் மற்றும் அவரது மனைவி கிருத்திகா வந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

TNPSC Online Classes

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here