CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி?

0
CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி?
CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி?
CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி?

CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று அட்மிட் கார்டு வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை பதிவு செய்வது குறித்து முழு விவரங்கள் இந்த பதிவில் காணலாம்.

CBSE பொதுத்தேர்வு:

நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தினால் கடந்த ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொதுத்தேர்வுகள் அனைத்தும் நடத்தப்படவில்லை. அதனை தொடர்ந்து CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. கொரோனாவை தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வி பாதிக்காத வகையில் ஆன்லைன் வகுப்புகள் தொடரப்பட்டன. பின்னர் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக CBSE வாரியம் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதாவது பொதுத்தேர்வு இனிமேல் இரண்டு பருவங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் முக்கியமான பாடங்களுக்கு மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தனித்தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு தேர்வுகள் முழுவதும் ஒத்திவைப்பு – அரசு தேர்வுகள் இயக்கம்!

அதன்படி முதல் பருவத் தேர்வானது நவம்பர் – டிசம்பர் மாதமும், இரண்டாம் பருவத்தேர்வு மார்ச் – ஏப்ரல் மாதங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது முதல் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி CBSE 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நவம்பர் 30ம் தேதி தொடங்கி 11ம் தேதி முடிவடைய உள்ளது. அதேபோல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 22ம் தேதி முடிய உள்ளது. இந்நிலையில் CBSE 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான நுழைவுச் சீட்டை இன்று வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நுழைவுச்சீட்டை மாணவர்கள் CBSE-யின் அதிகாரப்பூர்வ தளத்தில்  cbse.gov.in  -க்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி நிர்வாகம் அட்மிட் கார்டை டவுன்லோடு செய்து வழங்கும். அட்மிட் கார்டில் தேர்வு நேரம், மைய விவரங்கள், ரோல் எண் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். தேர்வர்கள் நிச்சயமாக இதனை மையத்திற்கு A4 தாளில் டவுன்லோடு செய்து ஹார்ட் காப்பியாக கொண்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்மிட் கார்ட் டவுன்லோடு செய்யும் வழிமுறை:
  • முதலில் CBSE-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான  cbse.gov.in  -க்கு செல்ல வேண்டும்.
  • பின்னர் Home Pageல் e-pareeksha லிங்க் கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர் Login கிளிக் செய்து, அதில் கேட்கும் தகவல்களை பதிவிட்டு Submit கொடுக்க வேண்டும். பின்னர் தோன்றும் அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!