இனி ‘ராஜா ராணி 2’ சீரியலில் சரவணனின் சந்தியாவாக நடிகை ஸ்ரேயா – உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
இனி 'ராஜா ராணி 2' சீரியலில் சரவணனின் சந்தியாவாக நடிகை ஸ்ரேயா - உற்சாகத்தில் ரசிகர்கள்!
இனி 'ராஜா ராணி 2' சீரியலில் சரவணனின் சந்தியாவாக நடிகை ஸ்ரேயா - உற்சாகத்தில் ரசிகர்கள்!
இனி ‘ராஜா ராணி 2’ சீரியலில் சரவணனின் சந்தியாவாக நடிகை ஸ்ரேயா – உற்சாகத்தில் ரசிகர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி’ சீரியலில் நடிகை ஆலியா மானஸாவிற்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் நடிகை பற்றிய விவரம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

ராஜா ராணி 2 சீரியல்:

ஹிந்தியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகிய ஒரு சீரியலின் தமிழ் ரீமேக் தான் ராஜா ராணி 2 சீரியல். போலீஸ் அதிகாரியாகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழும் நாயகி சந்தர்ப்ப சூழல் காரணமாக படிக்காத ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். கணவரிடம் தனது லட்சியத்தினை எடுத்து கூறி தனது வாழ்வில் சாதித்தாரா? என்பது தான் இந்த சீரியலின் மைய கரு. இந்த சீரியலில் நாயகி சந்தியா கதாபாத்திரத்தில் நடிகை ஆலியா மானசா நடித்து வருகிறார்.

கதாநாயகன் சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்து நடித்து வருகிறார். இருவரது நடிப்பும் இந்த சீரியலுக்கு தனி பலம் என்று தான் கூற வேண்டும். தற்போது நடிகை ஆலியா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். ஏற்கனவே அவருக்கு ஐலா என்ற பெண் குழந்தை இருக்க, தனது இரண்டாவது குழந்தையினை நடிகை ஆலியா மற்றும் நடிகர் சஞ்சீவ் எதிர்பார்த்து வருகின்றனர். குழந்தை பிறப்பிற்காக கண்டிப்பாக ஆலியா சீரியலில் இருந்து ஓய்வு எடுக்க இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

தற்போது அவருக்கு பதிலாக சந்தியா காதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. அந்த வகையில் அவருக்கு பதில் நடிகை ஸ்ரேயா நடிக்க பல வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த ப்ரோமோ ஒன்றும் வெளியாகி உள்ளது. ஸ்ரேயா மற்றும் சித்து இருவரும் மீண்டும் ஒன்றாக நடிப்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!