ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக விளங்கும் ரேஷன் கார்டில் உங்களின் மொபைல் எண் சரியாக இருப்பது அவசியமாகும். தற்போது ஆன்லைன் மூலமாக உங்கள் ரேஷன் அட்டையில் மொபைல் எண்ணை மாற்றலாம்.

ரேஷன் கார்டு:

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரிசி, பருப்பு, கோதுமை, மளிகை பொருட்கள், எண்ணெய் போன்ற வீட்டு உபயோக பொருட்களை ரேஷன் அட்டைதாரர்கள் குறைந்த விலையில் பெற்று வருகின்றனர். இந்தியாவில் PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC என்ற 5 வகையான ரேஷன் கார்டுகள் உள்ளது. இவை குடும்ப தலைவரின் வருமானத்தை பொறுத்தே தீர்மானிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு நிலவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு? அரசு விளக்கம்!

கடந்த 2020ம் ஆண்டு முதல் ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டமும் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் வெளிமாநில தொழிலார்களும் பயன்பெற்று வருகின்றனர். தற்போது ரேஷன் கார்டுகளில் விவரங்கள் மாற்றுதல் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தல் போன்ற வேலைகள் அனைத்தும் எளிதாக விட்டது. முன்பெல்லாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய நிலை இருக்கும் தற்போது ஆன்லைன் மூலம் எளிதாக ரேஷன் கார்டில் விவரங்கள் மாற்றலாம். பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் போன்றவைகளையும் செய்யலாம். அந்த வகையில் தற்போது ரேஷன் கார்டில் உங்களின் மொபைல் எண்ணையும் ஆன்லைன் மூலம் எளிதாக மாற்றலாம்.

முதலில் உங்கள் மாநில உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செல்ல வேண்டும்.
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் புதுப்பிக்கவும்’ என்ற ஆப்ஷனை தேர்தெடுத்து கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்யவும்.மேலும் அதில் குடும்பத் தலைவரின் ஆதார் எண் மற்றும் ஐடியை உள்ளிடவும். இறுதியாக உங்களின் மாற்றப்பட்ட புதிய மொபைல் எண்ணை உள்ளிட்டு save கொடுக்கவும். மேற்கண்ட நடைமுறைகளுக்கு பிறகு உங்கள் மொபைல் எண் மாற்றம் அடைந்து விடும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!