TNPSC கணிதம் கேள்விகள் மற்றும் விடைகள் – Important Sums!!
TNPSC தேர்வில் கணிதப்பகுதியில் மட்டும் 25 கேள்விகள் கேட்கப்படும். இவற்றின் மூலம் 37.5 மதிப்பெண்கள் கிடைக்கும். எளிதாக செய்ய வேண்டிய இந்த கேள்விகளை சரியாக ஆராய்ந்தாலே போதும், விடையை அறிந்துக் கொள்ளலாம். பல்வேறு தலைப்புகளின் கீழ் தான் இக்கனிதப் பிரிவில் கேள்விகள் கேட்கப்படும். அதனால் முக்கியமான தலைப்புகளில் சில கேள்விகளை அவற்றின் விடைகளுடன் வழங்கியுள்ளோம்.
1) A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
(A) 10 நாட்கள்
(B) 12 நாட்கள்
(C) 11 நாட்கள்
(D) 20 நாட்கள்
விடை – B
2) ஒரு வேலையை A மற்றும் B ஆகிய இருவரும் சேர்ந்து 12 நாட்களில் முடிப்பர். A மட்டும் அவ்வேலையை தனியாக 20 நாட்களில் முடிப்பர். எனில் B மட்டும் தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?
(A) 24 நாட்களில்
(B) 30 நாட்களில்
(C) 36 நாட்களில்
(D) 28 நாட்களில்
விடை – B
3) (?-968) / 79×4 = 512
(A) 10185
(B) 10190
(C) 11080
(D) 10180
விடை – C
4) சுருக்குக 8988 / 8 / 4
(A) 4494
(B) 561.75
(C) 2247
(D) 280.875
விடை – D
5) விடுபட்ட எண் காண்க.
??:45=35:63.
(A) 53
(B) 25
(C) 35
(D) 55
விடை – B