ஒரு வாட்ஸ் அப் அக்கவுண்ட்டிற்கு 16 பேர் வரையிலும் அட்மின்களாக இருக்கும்படியான புதுவித அப்டேட்டை whatsapp நிறுவனம் வெளியிட்டுள்ளது.
whatsapp அப்டேட்:
WhatsApp நிறுவனம் அடுத்தடுத்து ஏகப்பட்ட அப்டேட்டுகளை வெளியிட்டு படி இருந்து வருகிறது. அந்த வகையில், ஐந்து நிறத்தில் whatsapp தீம்களை நாமே செட் செய்து கொள்ளும்படியான அப்டேட்டும் வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பயனர்களுக்கு கூடுதல் அனுபவத்தை வழங்கும் பொருட்டு ஏகப்பட்ட அப்டேட் குறித்தான அறிவிப்பை வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியை போலவே whatsapp செயலியையும் பல பேர் லாகின் செய்து கொள்ளும் படியான அப்டேட் கூடிய விரைவில் வர இருக்கிறது. அதாவது, வாட்ஸ் அப் செயலியை 16 பேர் வரைக்கும் லாகின் செய்து கொள்ளலாம். மேலும், Pollலிலும் இன்ஸ்டாகிராம் செயலியை போல ஏகப்பட்ட ஆப்ஷன்கள் வரவிருக்கிறது. ஏகப்பட்ட பயனர்கள் ஒரே நேரத்தில் ஒரு வாட்ஸ் அப் செயலியை லாகின் செய்தாலும் பாதுகாப்பு அம்சத்தில் எந்தவித குறையும் இருக்காது.