சிலிண்டர்களின் விலையில் இப்படி ஒரு மாற்றமா? – முக்கிய தகவல் இதோ!
நாட்டில் மாதம் தோறும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஆனது மாற்றம் அடைந்து வருகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி சிலிண்டரின் விலை இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
சிலிண்டரின் விலை:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையைப் பொறுத்து சிலிண்டர் எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. மாதம் தோறும் சிலிண்டரின் விலைகள் ஆனது மாற்றத்திற்கு உட்பட்டது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் வீட்டு உபயோக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ஆனது ரூபாய் 918.50 ஆகும். 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூபாய் 1942 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நாளை (நவ.27) மின்தடை செய்யப்படும் முக்கிய பகுதிகள் – மின்வாரிய அலர்ட்
5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ₹ 340.5க்கும், 47.5 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.4851 க்கும் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இவற்றில் வணிக சிலிண்டரின் விலை ஆனது நடப்பு மாதத்தில் உயர்வை சந்தித்துள்ளது. வீட்டு சிலிண்டர்களின் விலையானது அக்டோபர் மாதத்தின் விலையிலேயே நீடித்து வருகிறது. இந்நிலையில் வரவுள்ள டிசம்பர் மாதத்தின் விலை நிலவரம் டிசம்பர் 1ஆம் தேதி அன்று வெளியாகும்.