மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுப்பு பயண சலுகை விதிகளில் மாற்றம் – வெளியான சூப்பர் செய்தி!
மத்திய அரசு அரசு ஊழியர்களின் விடுப்பு பயண சலுகை விதிகளில் சில மாற்றங்களை செய்ய இருக்கிறது. அது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மத்திய அரசு:
மத்திய அரசுத் துறைகளில் பணிபுரிந்து 7வது ஊதிய குழுவின் கீழ் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான விடுப்பு பயண சலுகை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) முக்கிய விளக்கம் அளித்துள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்கள் LTC இன் கீழ் ரயில் பயணம் மற்றும் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது சில சலுகைகள் வழங்கப்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
தற்போது மத்திய சிவில் சேவைகள் விதிகள் 1988ன் கீழ் திருத்தும் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அலுவலக குறிப்பாணையை DoPT வெளியிட்டுள்ளது. அதாவது இனி விடுப்பு பயண சலுகையின் கீழ் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களில் கேட்டரிங் கட்டணத்தை மத்திய அரசு ஊழியர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
அஸ்ஸாமில் 3 அரசு விடுமுறை நாட்கள் மாற்றம் – பட்டியல் வெளியீடு!
அது மட்டுமில்லாமல் விமான நிறுவனங்கள் விதிக்கும் ரத்து கட்டணங்கள் மற்றும் மூன்று அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் (IRCTC, BLCL, ATT) தங்கள் தளத்தைப் பயன்படுத்துவதற்காக விதிக்கப்படும் ரத்து கட்டணங்களையும் திருப்பிச் செலுத்தும் வசதியை அரசு வழங்கி இருக்கிறது.