Proxy Support: வாட்ஸ் அப் செயலியின் புதிய அம்சம் – இணைய தடைகள் இனி இருக்காது!!
சில உலக நாடுகளில் குறிப்பிட்ட தகவல் தொடர்பு செயலிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதால் , அதற்காக வெளியில் இருந்து ஆப்களை பயன்படுத்தாமல், Proxy Support அம்சம் கொண்டு வர இருப்பதாக வாட்ஸ் அப் அறிவித்துள்ளது.
Proxy Support அம்சம்:
ஒரு சில நாடுகளில் மக்களுக்கு இடையிலான தகவல் தொடர்புகளை கட்டுப்படுத்துவதற்காக குறிப்பிட்ட செயலிகளின் இயக்கத்தை அந்நாட்டில் தடை செய்திருப்பார்கள். இதனால் அங்கு வசிக்கும் மக்கள் சம்பந்தப்பட்ட செயலிகளை பயன்படுத்த வெளியில் இருந்து புதிதாக VPN செயலிகளை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஈரான் மற்றும் சிரியா போன்ற நாடுகளில் சமீபத்தில் நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் சில செய்திகள் அதிக அளவில் பரவியதால் மோசமான விளைவுகள் ஏற்பட்டது.
பள்ளி மாணவர்களின் மதிய உணவு திட்டத்தில் சிக்கன்.. வெளியான அறிவிப்பு – உத்தரவிட்ட மேற்கு வங்க அரசு!
Follow our Instagram for more Latest Updates
இதனை தவிர்ப்பதற்காக வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை ஈரான் அரசு தடை செய்தது. இந்நிலையில், வாட்ஸ் அப் செயலி Proxy சர்வர்களை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. இதனால் 3ம் நிலை செயலிகளை தனியாக பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும், தடை செய்யப்பட்ட நாடுகளில் புதிய வெர்சன் வாட்ஸ் அப் செயலிகளை பயன்படுத்தி, இந்த அம்சத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.