Home news IPL 2022: கொல்கத்தா அணி ஏலத்தில் குறிவைக்கும் 14 வீரர்கள் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

IPL 2022: கொல்கத்தா அணி ஏலத்தில் குறிவைக்கும் 14 வீரர்கள் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
IPL 2022: கொல்கத்தா அணி ஏலத்தில் குறிவைக்கும் 14 வீரர்கள் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
IPL 2022: கொல்கத்தா அணி ஏலத்தில் குறிவைக்கும் 14 வீரர்கள் - ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
IPL 2022: கொல்கத்தா அணி ஏலத்தில் குறிவைக்கும் 14 வீரர்கள் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

IPL யின் அனைத்து 10 அணிகளும் அடுத்த மாதம் நடைபெறும் ஏலத்தில் பங்கேற்று வலுவான வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளனர். இந்த ஆண்டு IPL ல் மொத்தம் 1214 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் 14 வீரர்களை குறிவைத்துள்ளது.

IPL மெகா ஏலம்:

ஐபிஎல் 2022 ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இரண்டு புதிய அணிகளான லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் சேர்த்து, ஐபிஎல் 2022 யில் மொத்தம் 10 அணிகள் போட்டியிட்டுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் , டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற அணிகள் தலா 4 வீரர்களை தங்கள் அணியில் தக்கவைத்துக் கொண்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா 3 வீரர்களை தக்கவைத்துக் கொண்டது.

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

2 புதிய அணிகளும் வீரர்களை ஒப்பந்தம் செய்யும் பணி முடிவடைந்த நிலையில் புதிதாக விளையாடும் அணிகளுக்கு யார் கேப்டனாக வழிநடத்துவார் என்று ரசிகர்களிடம் எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அகமதாபாத் அணிக்கு ஹர்திக் பாண்டியாவையும், லக்னோ அணிக்கு ராகுலும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் 14 வீரர்களை குறிவைத்துள்ளது. இதற்கு முன் BCCI அறிவிப்பின் படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆண்ட்ரே ரசல் 12 கோடிக்கும், வெங்கடேஷ் ஐயர் 8 கோடிக்கும், வருண் சக்ரவர்த்தி 8 கோடிக்கும், சுனில் நரைன் 6 கோடிக்கும் தக்கவைப்புக்குப் பிறகு மெகா ஆடிஷனுக்காக KKR க்கு 48 கோடி ரூபாய் பட்ஜெட் வைத்துள்ளது.

தமிழகத்தில் பிப்.1 முதல் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் – அரசு அறிவிப்பு!

இதை தொடர்ந்து இந்த ஆண்டு ஏலத்தில் கொல்கத்தா அணி தொடக்க வீரர்களாகிய தவான் ,வார்னர் குயின்டன் டி காக் மற்றும் கிரிஸ் லின் ஆகியோரை எடுக்க திட்டமிட்டு வருகிறது. மேலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இடத்தை நிரப்ப ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரை குறிவைத்துள்ளது. இதனை தொடர்ந்து பந்து வீச்சாளர்களாகிய ஷமி, கோபால், பெர்குசன், போல்ட், அஸ்வின், சாஹல் மற்றும் ஆல் ரவுண்டர் பென் கிட்டிங் என் மொத்தம் 7 பௌலர்களை ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here