Home news அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக நீட்டிப்பு, அடிப்படை ஊதியம் 23% உயர்வு – முதல்வர் அதிரடி அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக நீட்டிப்பு, அடிப்படை ஊதியம் 23% உயர்வு – முதல்வர் அதிரடி அறிவிப்பு!

0
அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக நீட்டிப்பு, அடிப்படை ஊதியம் 23% உயர்வு – முதல்வர் அதிரடி அறிவிப்பு!
அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக நீட்டிப்பு, அடிப்படை ஊதியம் 23% உயர்வு - முதல்வர் அதிரடி அறிவிப்பு!
அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக நீட்டிப்பு, அடிப்படை ஊதியம் 23% உயர்வு – முதல்வர் அதிரடி அறிவிப்பு!

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில அரசு தனது ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 62 ஆக நீட்டித்து, ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தையும் 23% ஆக உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஓய்வு வயது நீட்டிப்பு

ஆந்திரா மாநில அரசுத்துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒய்வு பெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்தி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இது தவிர மாநில அரசு ஊழியர்களுக்கான ஊதிய திருத்த ஆணையத்தின்படி, அடிப்படை ஊதியமும் தற்போது 23 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனைத்தும் 2022, ஜனவரி 1 முதல் நடைமுறைபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொது போக்குவரத்திற்கு தடை, முழு ஊரடங்கு அமல் – வெறிச்சோடிய சாலைகள்!

இது குறித்து ஆந்திரா மாநில அரசுத்துறை ஊழியர் சங்கத்தினருடன் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின்பாக, ‘ஆந்திரா மாநில அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் 23 சதவீதமாக உயர்த்தப்படும். அதே போல ஊழியர்களுக்கான ஓய்வு வயதும் 60 லிருந்து 62 ஆக உயர்த்தப்படுகிறது. இவை அனைத்தும் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது, மாநில அரசுத்துறையில் உள்ள லட்சக்கணக்கான அதிகாரிகள் துவங்கி கடைநிலை ஊழியகளின் சம்பள விகிதம், ஒய்வூதியம், ஒய்வு வயது தொடர்பாக முதன்மை செயலாளர் சமீர்ஷர்மா நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசின் இந்த முடிவால் ரூ.10,247 கோடி செலவினம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

சன் டிவி எதிர் நீச்சல் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ‘கோலங்கள்’ திருச்செல்வம் – ரசிகர்கள் உற்சாகம்!

இதற்கிடையில் கொரோனாவால் இறந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் கொடுக்கப்படும் பணி நியமனம் வரும் ஜூன் 30ம் தேதிக்குள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜெகன் அண்ணா ஸ்மார்ட் டவுன்ஷிப்ஸ்- லே அவுட்கள் மூலம் 10% மனைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் வீடுகள் இல்லாத அரசு ஊழியர்களுக்கு 20% தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here