Home news தமிழக ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம்? தகவல் வெளியீடு!

தமிழக ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம்? தகவல் வெளியீடு!

0
தமிழக ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம்? தகவல் வெளியீடு!
தமிழக ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம்? தகவல் வெளியீடு!
தமிழக ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம்? தகவல் வெளியீடு!

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் தொகுப்புடன் ரூ.1000:

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் பண்டிகைக்கு கடந்த ஆட்சி முதல் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதால் தொகுப்புடன் ரூ.2500 ரொக்கம் வழங்கப்பட்டது. தற்போது திமுக ஆட்சியை பிடித்துள்ளதால் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப்பணம் வழங்கப்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்தது.

பிரசவத்திற்கு பின் “பாரதி கண்ணம்மா” வெண்பா கணவருடன் வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!

அவர்களது சந்தேகத்தை போக்கும் வகையில் திமுக கட்சி தலைவரும் தற்போதைய முதல்வருமான முக ஸ்டாலின் அவர்கள் இதுவரை பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்பை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் மற்றும் மளிகை பொருள்களும் சேர்த்து மொத்தம் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர்கள் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

அவ்வாறு கூட்டுறவு இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப்பணத்தை பாதுகாப்புடன் வழங்கும் விதமாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதனை தொடர்ந்து 1000க்கு அல்லது அதற்கு மேல் ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள பகுதிகளில் 2 அல்லது 3 ரேஷன் ஊழியர்கள் சேர்ந்து மக்களுக்கு பொருட்கள் ஏதும் விடுபடாமல் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் விரைவில் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப்பணம் வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here