Home Entertainment சந்தியாவிடம் காதலை சொன்ன சரவணன், மகனை நினைத்து பெருமைப்படும் சிவகாமி – இன்றைய எபிசோட்!

சந்தியாவிடம் காதலை சொன்ன சரவணன், மகனை நினைத்து பெருமைப்படும் சிவகாமி – இன்றைய எபிசோட்!

0
சந்தியாவிடம் காதலை சொன்ன சரவணன், மகனை நினைத்து பெருமைப்படும் சிவகாமி – இன்றைய எபிசோட்!
சந்தியாவிடம் காதலை சொன்ன சரவணன், மகனை நினைத்து பெருமைப்படும் சிவகாமி - இன்றைய எபிசோட்!
சந்தியாவிடம் காதலை சொன்ன சரவணன், மகனை நினைத்து பெருமைப்படும் சிவகாமி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சரவணன் வெற்றி பெற்றதை நினைத்து சிவகாமி மற்றும் குடும்பத்தினர் சந்தோசப்படுகின்றனர். பின் சரவணன் சந்தியாவிடம் தனது காதலை வெளிப்படுத்துகிறார்.

ராஜா ராணி 2:

இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சரவணன் இந்த போட்டியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறார். அதனால் சிவகாமி சந்தோசமாக இருக்க, நீ கடந்த போட்டியில் மயங்கி விழுந்ததை நினைத்து நான் மிகவும் வருத்தப்பட்டேன் ஆனால் இப்போது உன்னை நினைத்து பெருமையாக இருக்கிறது என சொல்ல, இது எல்லாத்துக்கும் சந்தியா தான் காரணம் என பார்வதி சொல்கிறார். டாக்டரால் முடியாது என சொன்னதை கூட சந்தியா அண்ணி சரியாக செய்து காட்டி இருக்கிறார். இது எவ்வளவு பெரிய விஷயம் என கேட்க, சிவகாமி உண்மை தான் என சொல்கிறார்.

கயல் பிறந்தநாளை கொண்டாட இருக்கும் குடும்பத்தினர், ஐஸ்வர்யாவை பாசத்துடன் கவனிக்கும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

சரவணன் இவ்வளவு சாதனை செய்ய நீ தான் காரணம் என சந்தியாவை புகழ அதை பார்த்த சரவணன் அப்பா முதன்முறையாக சந்தியாவை இப்படி நேரடியாக புகழ்ந்து இருக்கிறாய் என சந்தோசப்படுகிறார், பின் போட்டியாளர்களில் ஒருவர் சரவணனை பாராட்டிவிட்டு இது எல்லாத்துக்கும் சந்தியா தான் காரணம் அவங்களும் நீங்களும் காதலை வெளிப்படுத்தாமல் இருக்கீங்க நீங்க சென்று காதலிப்பதாகா சொல்லுங்க அப்போது தான் சந்தியாவிற்கு மிகவும் சந்தோசமாக இருக்கும் என சொல்கிறார்.

பின் சரவணன் சந்தியாவை பார்த்து ரொம்ப நாளாக ஒன்று சொல்ல வேண்டும் என நினைத்தேன் ஆனால் சொல்ல முடியவில்லை. அதனால் இப்போது சொல்கிறேன் என சொல்ல தடுமாறுகிறார். பின் சந்தியா கிளம்ப சரவணன் நான் உங்களை காதலிக்கிறேன் என சொல்கிறார். அதை கேட்டு சந்தியா சந்தோஷத்தில் இருக்க, சரவணன் சந்தியாவிற்கு தைரியமாக முத்தம் கொடுக்கிறார். பின் அம்மா அப்பா திருமணத்தை கொண்டாடியது குறித்து செந்தில் சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

விஜய் டிவி “குக் வித் கோமாளி” சீசன் 3 தொடங்கும் நாள் – வெங்கடேஷ் பட் சொன்ன தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!

அப்போது சிவகாமி வந்து சரவணனிற்கு சுத்தி போட சந்தியாவிடம் கொடுத்து வெளியே போட சொல்கிறார். அர்ச்சனா நான் கொஞ்சம் அசால்டாக இருந்ததால் அவர் வெற்றி பெற்றார். இனிமேல் அப்படி நான் நடக்க விடமாட்டேன் என சொல்கிறார். பின் போன் வர சந்தியா அதை எடுத்து பேசுகிறார். அப்போது நிகழ்ச்சி நடத்துபவர்கள் தான் பேசினார்கள். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளனர். அதற்கு நம்மை எல்லாம் அளித்திருப்பதாக சொல்கிறார். குடும்பத்தினர் அனைவரும் சந்தோசமாக இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here