மோசமான கணக்குகள் என்கிற அடிப்படையில் 69 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
whatsapp:
வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாக வகையில் ஏகப்பட்ட அப்டேட்களை தொடர்ந்து வழங்கியபடி இருந்து வருகிறது. அந்த வகையில், வாட்ஸ்அப் தீம்களை விரும்பிய நேரத்தில் மாற்றம் செய்து கொள்வதிலிருந்து, விரும்பிய ஒருவரின் சேட்டை லாக் செய்து கொள்ளும் வசதி வரைக்கும் ஏகப்பட்ட அப்டேட்டுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும், வாட்ஸ்அப் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அவர்களின் whatsapp கணக்குகள் மொத்தமாக முடக்கம் செய்யப்பட்டு வருகிறது.
அதாவது, வாட்ஸ் அப் செயலியின் மூலமாக தவறான கருத்துக்களை பகிர்வது, பிற பயனர்களுக்கு தொல்லை கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் whatsapp கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஐடி விதிகள் 2021 இன் படி 69 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ் அப் கணக்குகள் பல்வேறு மோசமான புகாரின் அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.