இனி…தங்க நகைகளில் HUID 6 இலக்க எண் கட்டாயம் – விதி மீறினால் சிறை தண்டனை! நாளை (ஏப்.1) முதல் அமல்!
தங்க நகைகளை வாங்கும் வாடிக்கையாளர்களை உறுதி செய்யும் பொருட்டு, தங்க நகைகளின் மீது HUID 6 இலக்க எண் கட்டாயமாக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தங்க நகைகள்
நாட்டில் போலி தங்க நகைகளை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு, தங்க நகைகளின் மீது HUID 6 இலக்க எண் கட்டாயமாக்கப்படுவதாக இந்திய தர நிர்ணய அமைப்பு சென்னை பிரிவு தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இவர் கூறியதாவது, ஒவ்வொரு நகைக்கடைக்கும் 6 இலக்க HUID எண் தனியாக வழங்கப்படும் என்றும், இந்த எண் பொறிக்கப்பட்ட தங்க நகைகளை மட்டுமே விற்க அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்கா தேர்வு!
தமிழகத்தில் 170 ஹால்மார்க் முத்திரை மையங்கள் உள்ளது. இதில் முதலில் 26 மாவட்டங்களில் இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அதன்பின்னர் மீதமுள்ள 12 மாவட்டங்களில் விரைவில் அமலுக்கு கொண்டு வரப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த விதிமுறையானது வருடத்திற்கு ரூ.40 லட்சத்திற்கும் கீழ் விற்பனை செய்யும் கடைகளுக்கும், 2 கிராமிற்கு குறைவான நகைகளுக்கும் பொருந்தாது என கூறியுள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
இந்த புதிய விதிமுறையானது நாளை (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த புதிய விதிமுறையை நடைமுறைப்படுத்தாமல், விதி மீறலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதன்படி, விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.1 லட்சம் அல்லது நகை விலையில் 5 மடங்கு அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
Exams Daily Mobile App Download