LTI நிறுவனத்தில் 5,500 பேருக்கு வேலைவாய்ப்பு – அடுத்த நிதியாண்டுக்குள் திட்டம்!
இந்தியாவின் முன்னணி தொழிநுட்ப நிறுவனமான லார்சன் அண்ட் டூப்ரோ இன்போடெக் (LTI), வரும் 2022ம் நிதியாண்டுக்குள் 5,500 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வேலை வாய்ப்பு
இந்தியாவில் கொரோனா 2ம் அலைத்தொற்றுக்கு பின்பாக பல்வேறு துறைகளில் புதிய பணியமர்த்தல் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதில் குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள் எதிர்பாராத அளவுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. அதாவது நோய் தொற்று காலத்தில் ஏற்பட்ட டிஜிட்டல் சேவை முடக்கத்தை சரி செய்யவும், டிஜிட்டல் மயமாகி வரும் பல துறைகளுக்கான தேவையை பூர்த்தி செய்யும் விதத்திலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சத்துணவு துறையில் 49,000 காலிப்பணியிடங்கள் – ஊழியர் சங்கம் கோரிக்கை!
அந்த வகையில் மும்பை மாநகரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் லார்சன் அண்ட் டூப்ரோ இன்போடெக் (LTI) நிறுவனம் வரும் 2022ம் நிதியாண்டுக்குள் சுமார் 5,500 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த புதிய பணியமர்த்தல், தொழில்நுட்பம் அல்லாத வேலைவாய்ப்பு, உள்நாட்டில் உள்ள திறமைகளை மேம்படுத்துதல் மற்றும் ESG மற்றும் சைபர் செக்யூரிட்டி போன்ற புதிய பகுதிகளை மேம்படுத்தும் என CEO சஞ்சய் ஜலோனா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 50 மில்லியன் டாலர் வருவாய் கொண்ட ஒரு வாடிக்கையாளரையும், 20 மில்லியன் டாலர் பிரிவில் 3 வாடிக்கையாளர்களையும், 10 மில்லியன் டாலர் பட்டியலில் ஐந்து வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. அதனால் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ள இந்நிறுவனம், அடுத்த நிதியாண்டுக்குள் சுமார் 5,500 புதியவர்களை எதிர்பார்த்துள்ளது.
இதற்கு முன்னதாக நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் சுமார் 4,000 புதிய ஊழியர்களுடன் இந்நிறுவனம் 42,382 மொத்த ஊழியர்களை பெற்றிருக்கிறது. இதனுடன் கடந்த காலாண்டில் 8.9% நிலையான நாணய வளர்ச்சியுடன் ஈர்க்கக்கூடிய எண்களை LTI நிறுவனம் அறிவித்தது. அதே நேரத்தில் இதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு 20.8% உயர்ந்து ரூ.551.7 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் ஒருங்கிணைந்த வருவாய் 25.6% அதிகரித்து ரூ.3,767 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Job
Super