ஜனவரி மாதத்திற்குள் 46,584 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் – முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் 2026 ஜனவரி மாதத்திற்குள் மொத்தம் 46,584 பணியிடங்கள் நிரப்பப்படும் என விதி 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
வேலைவாய்ப்பு:
தமிழக அரசானது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பினை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்து பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பான விதி 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் இன்று சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 65,483 இளைஞர்களுக்கு அரசு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளன. 5.08 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.
மாணவர்களுக்கு கவனத்திற்கு – அடிப்படை கணினி அறிவியல் மற்றும் ஏஐ பாடத்திட்டம் அறிமுகம்!
மேலும் தமிழகத்தில் வரும் ஜனவரி 2026க்குள் TNPSC மூலமாக மூலமாக 17, 595 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19, 260 ஆசிரியப் பணியிடங்களை, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3,041 பணியிடங்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6,688 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் ஜனவரி மாதத்திற்குள் மொத்தம் 46,584 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.