மாநிலத்தில் 34 நாட்கள் அரசு பொது விடுமுறை அறிவிப்பு – பட்டியல் வெளியீடு!
2022 ஆம் ஆண்டில் அசாம் மாநிலத்தில் 34 பொது விடுமுறை இருக்கும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பை மாநில பொது நிர்வாகத்துறை வெளியிட்டது. மேலும் அரசு விடுமுறை தினங்களின் பட்டியலும் அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
பொது விடுமுறை பட்டியல்:
ஒவ்வொரு ஆண்டும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அடுத்து வர இருக்கும் வருடத்தின் விடுமுறை தினங்களை பட்டியலிட்டு அதனை முன்கூட்டியே வெளியிட்டு விடும். இதன் அடிப்படையில் அந்த ஆண்டிற்கான பணிகள் திட்டமிடப்படும். தற்போது அசாம் மாநில அரசு 2022ம் ஆண்டிற்கான பொது விடுமுறை தினங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2022 ஆம் ஆண்டில் அசாம் மாநிலத்தில் 34 அதிகாரப்பூர்வ விடுமுறைகள் இருக்கும் என்று பொது நிர்வாகத்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விடுமுறை நாட்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கனமழை எச்சரிக்கை எதிரொலி!
அதன்படி, ஆகஸ்ட் 9 ஆம் தேதி ‘முஹர்ரம்’ பண்டிகை மற்றும் அக்டோபர் 9 ஆம் தேதி ‘லட்சுமி பூஜை’ இந்த இரண்டு நாட்களில் மட்டும் அரை நாட்கள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர ஆண்டு முழுவதும் 31 தடைசெய்யப்பட்ட விடுமுறைகள் இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வரின் ஒப்புதலுடன் கூடுதலாக இரண்டு விடுமுறைகளை அறிவிக்க பொது நிர்வாகத் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து துணை ஆணையர்களும் அந்தந்த மாவட்டங்களில் ஒரு உள்ளூர் விடுமுறையை அறிவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், கம்ரூப் மெட்ரோ மாவட்டத்தைப் பொறுத்தவரை, இரண்டு உள்ளூர் விடுமுறைகளை அறிவிக்க அனுமதிக்கப்படும்.
விடுமுறை பட்டியல்:
- ஜனவரி 14 – மக பிஹு
- ஜனவரி 15 – துசு பூஜை
- ஜனவரி 23 – நேதாஜியின் பிறந்தநாள்
- ஜனவரி 25 – Gwther Bathou San
- ஜனவரி 26 – குடியரசு தினம்
- ஜனவரி 31 – ‘Me-Dam-Me-Phi’
- பிப்ரவரி 16 – பிர் சிலாராய் திவாஸ்
- மார்ச் 18 – ‘டோல் ஜாத்ரா’
- ஏப்ரல் 14 மற்றும் 16 – போஹாக் பிஹு
- ஏப்ரல் 15 – போஹாக் பிஹு மற்றும் புனித வெள்ளி
- ஏப்ரல் 21 – ‘சதி சதானி திவாஸ்’
- மே 1 – ‘மே தினம்’ மற்றும் தாமோதர்தேவரின் திதி
- மே 3 – ஐத்-உல்-பித்ர்
- மே 16 – புத்த பூர்ணிமா
- மே 17 – ஸ்ரீஸ்ரீமாததேவரின் ஜன்மோத்ஸவ்
- ஜூலை 10 – ஐத்-உல்- சுஹா
- ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்
- ஆகஸ்ட் 19 – ஜன்மாஷ்டமி
- ஆகஸ்ட் 29 – ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி
- செப்டம்பர் 6 – கரம் பூஜை
- செப்டம்பர் 14 – ஸ்ரீ ஸ்ரீ மாததேவரின் திதி
- அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி மற்றும் துர்கா பூஜை (சப்தமி)
- அக்டோபர் 3 மற்றும் 4 – துர்கா பூஜை அஸ்தமி மற்றும் நவமி)
- அக்டோபர் 5 – ‘பிஜோய தசமி’ மற்றும் ஸ்ரீமந்த சங்கரதேவரின் ஜன்மோத்ஸவ்
- அக்டோபர் 18 – கடி பிஹு
- அக்டோபர் 14 – காளி பூஜை மற்றும் தீபாவளி
- அக்டோபர் 27 – பத்ரித்விதியா
- அக்டோபர் 30 – சத் பூஜை
- நவம்பர் 8 – குருநானக் பிறந்த நாள்
- நவம்பர் 24 – லச்சித் திவாஸ்
- டிசம்பர் 2 – அசோம் திவாஸ் (சுய்-கா-பா திவாஸ்)
- டிசம்பர் 25 – கிறிஸ்துமஸ்