இந்தியா வந்தடைந்த 3 ரபேல் போர் விமானங்கள் – வலுப்பெறும் விமானப்படை!!

0
இந்தியா வந்தடைந்த 3 ரபேல் போர் விமானங்கள் - வலுப்பெறும் விமானப்படை!!
இந்தியா வந்தடைந்த 3 ரபேல் போர் விமானங்கள் - வலுப்பெறும் விமானப்படை!!
இந்தியா வந்தடைந்த 3 ரபேல் போர் விமானங்கள் – வலுப்பெறும் விமானப்படை!!

எதிரி நாட்டு படைகளை துல்லியமாக தாக்கக்கூடிய ரபேல் போர் விமானங்கள் பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியா வந்தடைந்துள்ளன. இதனால் இந்திய விமான படையில் இருக்கும் ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

ரபேல் விமானங்கள்

இந்திய விமானப் படையை வலுப்படுத்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனத்திலிருந்து 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா பெற்றுள்ளது. இதற்காக 2016ம் ஆண்டு மத்திய அரசு, அந்நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி 56 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ரபேல் விமானங்களை இந்தியா பெற்றுக்கொள்ள உள்ளது. அதன் படி 11 ரபேல் போர் ரக விமானங்களை பிரான்சிலிருந்து இந்தியா பெற்றுக்கொண்டது.

TN Job “FB  Group” Join Now

முன்னதாக லடாக்கில் இந்தியா – சீனா எல்லை பிரச்சனையின் போது இந்த ரபேல் விமானங்கள் கண்காணிப்புக்காக பயன்படுத்தபட்டன. இந்த ஒப்பந்தத்தின் படி மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளன. பிரான்சிலிருந்து கிளம்பிய இந்த விமானங்கள் வழியில் எங்கும் நில்லாமல் இந்தியா வந்தடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 விமானங்களையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை 14 ரபேல் விமானங்கள் உள்ளது.

ஏப்ரல் மாதம் முழுவதும் தடுப்பூசி செலுத்த வேண்டும் – மத்திய அரசு வலியுறுத்தல்!!

இது தவிர மேலும் 7 ரபேல் விமானங்கள் இந்த மாதத்திற்குள் இந்தியா வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்திற்குள் வந்தடையும் விமானங்களை தவிர மீதமுள்ள விமானங்கள் அடுத்த ஆண்டிற்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இவ்வகை அதிநவீன ரபேல் விமானங்களில் மெட்டர், ஹம்மர் போன்ற ஏவுகணைகள் இணைக்கப்பட்டுள்ளதால், எதிரி விமானங்களை மிக துல்லியமாக தாக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய விமானப்படை மேலும் வலுப்பெறும் என கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here