2023 மதுரை சித்திரை திருவிழா – மே – 5 கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!
மதுரையில் நடைபெறும் திருவிழாக்களில் ஒன்றான சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் மே 5ம் தேதி நடைபெற உள்ளது.
சித்திரை திருவிழா:
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை காண மதுரையின் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மதுரைக்கு வருகை புரிவர்.
கோவைக்கு வருகை தரும் இந்திய குடியரசுத்தலைவர் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!
Follow our Instagram for more Latest Updates
நடப்பு ஆண்டு மதுரையில் சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி முதல் மே 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவின் கொடியேற்றம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மே -2 ம் தேதி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறும்.
அடுத்ததாக மே 3-ம் தேதி 4 மாசி வீதிகளிலும் தேரோட்டம் சிறப்பாக நடைபெறும். மதுரை சித்திரை திருவிழா என்றாலே அனைவரின் நினைவுக்கு வரும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு மே-5ம் தேதி சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறவுள்ளது. அதற்கு முந்தைய நாள் மே-4ம் தேதி அன்று கள்ளழகர் எதிர்சேவை நடைபெறும்.