சென்னை மாநகராட்சியில் சதுர அடி நிலம் ரூ.1000 நிர்ணயம் – பதிவுத்துறை வெளியிட்ட அப்டேட்!

0
சென்னை மாநகராட்சியில் சதுர அடி நிலம் ரூ.1000 நிர்ணயம் - பதிவுத்துறை வெளியிட்ட அப்டேட்!
சென்னை மாநகராட்சியில் சதுர அடி நிலம் ரூ.1000 நிர்ணயம் - பதிவுத்துறை வெளியிட்ட அப்டேட்!
சென்னை மாநகராட்சியில் சதுர அடி நிலம் ரூ.1000 நிர்ணயம் – பதிவுத்துறை வெளியிட்ட அப்டேட்!

தமிழகத்தில் பத்திர பதிவுத்துறை வெளியிட்ட அறிவிப்பின் படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சதுர அடி நிலம் ரூ.1000ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பத்திர பதிவுத்துறை

தமிழகத்தில் பத்திரப் பதிவுத்துறை மூலம் மாநிலம் முழுவதும் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கான குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பை மாற்றி அமைக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு புதிய வழிகாட்டி மதிப்பு இந்த மாதமே அமலுக்கு வந்துள்ளது. எந்தெந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து பகுதிகளில் வழிகாட்டி மதிப்பு எவ்வளவு என்பது குறித்து அனைத்து பதிவாளர் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்க இருக்கின்றனர்.

TNPSC குரூப் 2, 2A தேர்வுகளில் வெற்றி பெற எளிய வழி – குறைந்த விலையில் சூப்பர் ஆஃபர்!!

அதன் படி சென்னை மாநகராட்சி, கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு சதுர அடிக்கு ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆவடி, தாம்பரம், காஞ்சிபுரம் மாநகராட்சிகளில் குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு ரூ.800 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், நாகர்கோவில் ஆகிய மாநகராட்சி பகதிகளில் குறைந்தபட்சம் சதுர அடிக்கு ரூ.700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!