மத்திய அரசு வழங்கும் ரூ.10 லட்சம் ரொக்கம் – தகுதிகள், வயது வரம்பு & முழு விபரங்கள்!

0
மத்திய அரசு வழங்கும் ரூ.10 லட்சம் ரொக்கம் - தகுதிகள், வயது வரம்பு & முழு விபரங்கள்!
மத்திய அரசு வழங்கும் ரூ.10 லட்சம் ரொக்கம் - தகுதிகள், வயது வரம்பு & முழு விபரங்கள்!
மத்திய அரசு வழங்கும் ரூ.10 லட்சம் ரொக்கம் – தகுதிகள், வயது வரம்பு & முழு விபரங்கள்!

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்தது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு மத்திய அரசு நிதி உதவி செய்து வருகிறது. இது குறித்த தகுதி உள்ளிட்ட விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

அரசு நிதியுதவி:

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியது. கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை உருமாறி பரவியதன் காரணமாக நாளுக்கு நாள் இறப்பு விகிதம் அதிகரித்தது. இதனால் பலர் தங்களது பெற்றோர்களை இருந்தது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்குவதாக பிரதமர் அறிவித்தார்.

இருமடங்காக உயர்ந்த தக்காளி விலை – கவலையில் இல்லத்தரசிகள்!

இதில் 18 வயதிலிருந்து மாதாந்திர உதவித் தொகையையும், 23 வயதை அடையும் போது மொத்தமாக ரூ.10 லட்சம் ரொக்கத் தொகையும் குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டம் வழங்குகிறது. இந்த திட்டத்தை பெற 31.12.2021 வரை தகுதியான குழந்தைகள் பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.

இந்த திட்டத்தில் சேர்வதற்கான தகுதிகள்:

பெற்றோர்கள் இருவரும் (II) வாழும் ஒரு பெற்றோர் அல்லது (III) சட்டப்படியான காப்பாளர் / தத்தெடுத்த பெற்றோர்கள் / தத்தெடுத்த பெற்றோர்களில் ஒருவர், கோவிட் -19 என்பதைப் பெருந்தொற்று என உலக சுகாதார அமைப்பு அறிவித்த 11.03.2020 லிருந்து 31.12.2021 க்குள் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உயிரிழந்திருந்தால் இந்தத் திட்டத்தில் பயனாளியாக இணைய முடியும் (IV) பெற்றோர்கள் இறந்த தேதியில் சம்பந்தப்பட்ட குழந்தைக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்கக் கூடாது

ஆறு வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையங்களிலிருந்து ஊட்டச்சத்து, பள்ளி கல்விக்கு முந்தைய கல்வி, தடுப்பூசி, சுகாதார பரிசோதனை போன்றவற்றைப் பெறலாம்.

தினந்தோறும் பள்ளிக்கு வந்து செல்லும் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் / கேந்திரிய வித்யாலயாக்கள் / தனியார் பள்ளிகள் சேர்த்துக்கொள்ளவேண்டும். அரசுப் பள்ளிகளில் இந்தத் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்தக் குழந்தைகளுக்கு இரண்டு ஜோடி இலவச சீருடைகள் மற்றும் பாடபுத்தகங்களை வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் 12(1)(சி) பிரிவின் கீழ் கல்வி கட்டணத்தில் இருந்து இவர்களுக்கு விலக்களிக்க வேண்டும். சில சூழ்நிலைகளில் மேலே குறிப்பிட்ட சலுகைகளைப் பெற முடியாவிட்டால் குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்திலிருந்து நிதியுதவி வழங்கப்படும். சீருடை, பாட நூல்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவற்றிற்கான செலவும் வழங்கப்படும்.

தமிழக அரசின் முக்கிய துறைகளில் பணிபுரிவோர் கவனத்திற்கு – புதிய உத்தரவு!

11-18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மேற்குறிப்பிட்ட வகையான பள்ளிகளில் இடம் கிடைப்பதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவசிய வித்யாலயா / கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா / ஏகலைவா மாதிரி பள்ளிகள் / ராணுவப் பள்ளி/ நவோதயா வித்யாலயா அல்லது மற்ற பிற உறைவிடப் பள்ளியில் இந்தக் குழந்தைகள் மாவட்ட ஆட்சியரால் சேர்க்கப்படலாம்.

இந்தியாவில் தொழில் முறை பாட வகுப்புகள் / உயர்கல்விக்குக் கடன் பெற்றுத் தந்து உதவி செய்யப்படும். சில சூழல்களில் மத்திய, மாநில அரசுகள் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வட்டியிலிருந்து விலக்கு கிடைக்காவிட்டால் கல்விக்கடனுக்கான வட்டி குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து செலுத்தப்படும்.

அனைத்துக் குழந்தைகளும் ரூ.5 லட்சம் சுகாதார காப்பீட்டுடன் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனாளியாக சேர்க்கப்படுவார்கள்.

பயனாளிக்கு வழங்கப்படும் மொத்தமான ரொக்கத்தொகை அவர்களால் தொடங்கப்பட்ட அஞ்சலகக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். பயனாளியாக அடையாளம் காணப்படும் குழந்தைகள் 18 வயது அடையும் போது ரூ.10 லட்சம் இந்த கணக்கில் சேர்க்கப்படும். 18 வயதிலிருந்து இவர்கள் மாதந்தோறும் நிதியுதவியைப் பெற்று கொள்ளலாம். 23 வயதை அடையும் போது ரூ.10 லட்சத்தை அவர்கள் மொத்தமாக பெறுவார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!