முன்னணி IT நிறுவனங்களில் 1.35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – Freshersகளை பணியமர்த்த திட்டம்!

1
முன்னணி IT நிறுவனங்களில் 1.35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - Freshersகளை பணியமர்த்த திட்டம்!
முன்னணி IT நிறுவனங்களில் 1.35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - Freshersகளை பணியமர்த்த திட்டம்!
முன்னணி IT நிறுவனங்களில் 1.35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – Freshersகளை பணியமர்த்த திட்டம்!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகப்படியான வருவாய் ஈட்டினர். அதுமட்டுமல்லாமல் அதிகமானோரை பணியமர்த்தினர். தற்போது முன்னணி ஐடி நிறுவனங்கள் வேலைவாய்ப்பு குறித்த அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

மக்கள் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகளை சந்தித்துள்ளனர். தனியார் துறையில் பணிபுரியும் பலர் தங்களது நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஆனால் கொரோனா பேரிடர் காலத்திலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய வைத்து அதிக வருமானம் ஈட்டினர். மேலும் பல புதிய பணியாளர்களை நியமனம் செய்தனர். நடப்பு ஆண்டிலும் இந்த பணியமர்த்தலானது தொடரும் என இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக தகவல் தொழில்நுட்ப தேவை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு அமல் – உயர் நீதிமன்றம் கேள்வி!

பல நிறுவனங்கள் தங்களது வணிகங்களை டிஜிட்டல் மயமாக மாற்றத் தொடங்கியுள்ள நிலையில், ஊழியர்களும் வீட்டில் இருந்தே பணியாற்ற தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய தொடங்கியுள்ளன. கொரோனாவின் வருகைக்கு பிறகு ஐடி மற்றும் ஐடி சார்ந்த துறைகளில் ஊழியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. டிஜிட்டல் தேவை மட்டுமல்லாமல் சைபர் செக்யூரிட்டி, கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்டிஸ்ட் என பல துறைகளிலும் தேவையானது அதிகரித்துள்ளது. குறிப்பாக தொடர்ந்து ஐடி துறையில் திறன் மிக்க ஊழியர்கள் தேவை இருந்து கொண்டே உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் கடந்த 2 காலாண்டுகளாகவே பெரும் அளவில் பணியமர்த்தல், சம்பள உயர்வு, பதவி உயர்வு, போனஸ் என ஐடி துறை குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், தற்போது அவற்றின் தேவை அதிகம் உள்ளதால் புதியவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சரியான பயிற்சிகளை கொடுத்து பணியில் சேர்த்து வருகின்றனர். குறிப்பாக வளர்ந்து வரும் நிறுவனங்கள் லாப நோக்கத்திற்காக அனுபவம் இல்லாத பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி குறைந்த சம்பளம் வழங்கி வேலை வாங்குகின்றனர்.

டிசிஎஸ் அறிவிப்பு:

நாட்டின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் நடப்பு நிதியாண்டில் 40,000 புதிய பணியாளர்களை நியமிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் இது நாட்டின் மிக அதிகளவில் பணியாளர்களை கொண்டுள்ள நிறுவனமாகும்.

இன்ஃபோசிஸ் நிறுவனம்:

இன்ஃபோசிஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 35,000 பணியாளர்களை பணியமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் தேவைக்கேற்ப பணியாளர்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

விப்ரோ நிறுவனம்:

நாட்டின் மற்றொரு பெரிய நிறுவனமான விப்ரோ செப்டம்பர் காலாண்டில் 6000 ஃபிரஷ்ஷர்களை பணியமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் 30,000 பேருக்கு ஆஃபர் லட்டர் வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆஃபர் லட்டர் பெற்றவர்கள் 2023 ஆம் ஆண்டு நிறுவனத்தில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்.சி.எல் நிறுவனம்:

ஹெச்.சி.எல் டெக் நிறுவனமும் நடப்பு நிதியாண்டில் 22,000 பேரை நியமனம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இது கடந்த நிதியாண்டினை காட்டிலும் 50% அதிகமாகும், நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் 6000 ஃபிரஷ்ஷர்களை பணியமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!