Home news TNUSRB 2,599 காலிப்பணியிடங்கள் – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

TNUSRB 2,599 காலிப்பணியிடங்கள் – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

0
TNUSRB 2,599 காலிப்பணியிடங்கள் – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
TNUSRB 2,599 காலிப்பணியிடங்கள் - விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
TNUSRB 2,599 காலிப்பணியிடங்கள் – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் ஆயுதப்படை பிரிவில் காலியாக உள்ள 2,599 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து காலிப்பணியிடங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNUSRB:

தமிழக காவல்துறையில் உள்ள ஆயுதப்படை சிறப்பு காவல் படை, தீயணைப்பாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் TNUSRB தேர்வு வாரியத்தால் தகுந்த தேர்வுகள் நடத்தப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு காவல்துறையில் 2, 599 புதிய காவலர்களை நியமிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை குறித்த முக்கிய அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் வெளியீடு!

அதன்படி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவில் 1,819 ஆண் காவலர்களும், ஆயுதப்படை பிரிவில் 780 பெண் காவலர்களும் நியமிக்கபடவுள்ளனர். விரைவில் இதற்கான ஆட்கள் சேர்ப்பு நடைமுறையை தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்திற்கு மாநில காவல்துறை தலைவர் தகவல் அனுப்பியுள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

இதனையடுத்து TNUSRB பணியிடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் நிலை காவலர்களை தொடர்ந்து நடப்பு ஆண்டு 600 சப்-இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும் என்றும் காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here