Home news TNPSC குரூப் 4 VAO பாடத்திட்டம், கல்வித்தகுதி, வயது வரம்பு – தேர்வர்கள் கவனத்திற்கு!

TNPSC குரூப் 4 VAO பாடத்திட்டம், கல்வித்தகுதி, வயது வரம்பு – தேர்வர்கள் கவனத்திற்கு!

1
TNPSC குரூப் 4 VAO பாடத்திட்டம், கல்வித்தகுதி, வயது வரம்பு – தேர்வர்கள் கவனத்திற்கு!
TNPSC குரூப் 4, விஏஓ தேர்வின் பாடத்திட்டம், கல்வித்தகுதி, வயதுவரம்பு - தேர்வர்கள் கவனத்திற்கு!
TNPSC குரூப் 4, விஏஓ தேர்வின் பாடத்திட்டம், கல்வித்தகுதி, வயதுவரம்பு – தேர்வர்கள் கவனத்திற்கு!

தமிழகத்தின் அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்விற்கான பாடத்திட்டம், கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு பற்றிய முக்கிய விவரங்கள் அனைத்தும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

குரூப் 4, விஏஓ தேர்வு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) தேர்வுகள் கடந்த இரண்டு வருடமாக கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக நடத்தப்படவில்லை. இதனால் தேர்விற்கு விண்ணப்பிக்க காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதத்தில் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருமே இந்த தேர்வை எழுத தகுதி பெற்றவர்கள். ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டுமே பணிக்காக நடத்தப்படுகிறது.

கண்ணனுக்கு குழந்தையை காட்ட நினைக்கும் தனம், மறுக்கும் குடும்பத்தினர் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ!

வரும் ஜனவரி மாதத்தில் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகள் நடத்தப்பட்டு மார்ச் மாதம் முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. TNPSC குரூப் 4 தேர்வின் மூலம் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் போன்ற பணியிடங்களுக்கான நியமனம் செய்யப்படுகிறது. குரூப் 4 தேர்வுகளுக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி போதுமானதாகும், ஆனால் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முன்பாக அகவிலைப்படி உயர்வு – ஆண்டிற்கு ரூ.2.11 லட்சம் ஊதிய உயர்வு!

குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 முதல் 30 வரை வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். தற்போது தமிழக அரசு, தமிழ் பாடத்தாளில் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிற தாள்களை மதிப்பீடு செய்யும் வகையில் தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்துள்ளது. இதனால் பாடத்திட்டம் முறை குறித்து மாற்றங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

இந்திய கடற்படையில் 300 காலிப்பணியிடங்கள் – 10வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும். அவற்றில் 75- பொது அறிவு வினாக்களும் , 25- திறனறி தேர்வு வினாக்களும் கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மூலம் பணி நியமனம் செய்யப்படுவார்கள். குரூப் 4 தேர்வில் பெரும்பாலும் வினாக்கள் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப் புத்தகங்களில் கேட்கப்படும். ஒரு சில நேரங்களில் 11 மற்றும் 12ம் வகுப்பு படங்களில் இருந்தும் கேட்கப்படும். தேர்வர்கள் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் படித்தாலே போதுமானது. அரசு வெளியிடும் பாடத்திட்டதினை சோதித்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. தேர்வில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் தேர்விற்கு தயாராகும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here