Home news TN TRB தமிழகத்தில் 2222 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – பிப்.,4ல் தேர்வு!

TN TRB தமிழகத்தில் 2222 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – பிப்.,4ல் தேர்வு!

0
TN TRB தமிழகத்தில் 2222 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – பிப்.,4ல் தேர்வு!

தமிழகத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு பிப்.4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

TN TRB பட்டதாரி ஆசிரியர் தேர்வு தேதி:

தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் மூலம் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு பிப்.4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு மொத்தம் 2222 காலி பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பானது கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. இந்த தேர்வு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில் வெள்ளபாதிப்பால் பிப். 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பது.

அந்த வகையில் இன்னும் 2 நாட்களில் தேர்வு நடைபெற இருப்பதால் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற இருக்கின்றன. இந்த போட்டி தேர்வானது தமிழகம் முழுவதும் உள்ள 130 மையங்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை 41,485 பேர் எழுத விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.36400 – 115700/- ஊதியம் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here