Home news தமிழக மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை – கனமழை எதிரொலி!

தமிழக மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை – கனமழை எதிரொலி!

0
தமிழக மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை – கனமழை எதிரொலி!
தமிழக மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - கனமழை எதிரொலி!
தமிழக மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை – கனமழை எதிரொலி!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

எச்சரிக்கை அறிவிப்பு

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. அதனால், அந்த மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாய் மாறி இருக்கிறது. இந்நிலையில் மழை நிவாரணப் பணி மேற்கொள்ள வேண்டும் எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து சேதங்களை தவிர்க்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், தாமிரபரணி ஆற்றில் தற்போது 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் பாபநாசம் அணை 90% நிரம்பிவிட்டது.

2024 ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை பட்டியல்கள் – அதிகாரப்பூர்வ வெளியீடு!

அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருவதால், தாமிரபரணியில் தண்ணீரை திறந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வைகை அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்துள்ளது. அதனால், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், ஆகிய 5 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here