Home news தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு ரேஷன் கார்டு ரத்து? அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு ரேஷன் கார்டு ரத்து? அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு ரேஷன் கார்டு ரத்து? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு ரேஷன் கார்டு ரத்து? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு ரேஷன் கார்டு ரத்து? அமைச்சர் விளக்கம்!

நேற்று நடந்த பேரவை கூட்டத்தில் ரேஷன் கார்டுகள் மற்றும் அதில் உள்ள பிரச்சனைகளுக்கான தீர்வு குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன. அனைத்து கேள்விகளுக்கும் பேரவை கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.

ரேஷன் கார்டு:

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பல ஏழை எளிய மக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய் முதலான அன்றாட தேவை பொருட்களை வாங்கி பயன் பெற்று வருகின்றனர். தனி நபர்களுக்கும் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகிறது. அதாவது தனி நபருக்கு 12 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, எண்ணெய், மண்ணெண்ணெய் ஆகியவை வழங்கப்படுகிறது. தற்போது வரை 19.71 லட்சம் தனி நபர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுமுறை – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!

அதன்படி நேற்று நடந்த பேரவையில் திமுக ஆட்சிக்கு பின்னர் எத்தனை ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்கள் வந்துள்ளது மற்றும் எத்தனை ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது என கேட்கப்பட்டது. மேலும், கைரேகை இயந்திரம் அவ்வப்போது செயலிழந்து காணப்படுவதால் எப்போது அதற்கான நிரந்திர தீர்வு கிடைக்கும் எனவும், முதியோர் உதவித் தொகை பெற்றால் ரேஷன் கார்டு ரத்தாகுமா எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டது.

அதற்கு இதுவரை திமுக ஆட்சியில் 15.74 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன மற்றும் 10.92 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். மேலும், கைரேகை இயந்திரம் செயல்படாத நேரத்தில் கார்டு எண்ணை பதிவு செய்து பிராாக்ஸி முறையில் மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும், ரேஷன் கடைகளுக்கு வர முடியாத முதியவர்களுக்கு குடும்பத்தில் உள்ள எவராவது அவருக்கு பதிலாக ரேஷன் பொருட்களை பெற்று கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதியோர் உதவித் தொகை பெற்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here