Home news தேர்வு எழுதும் நகரத்தை மாற்ற ஒரு அறிய வாய்ப்பு – ஐஐடி நிறுவனம் அறிவிப்பு!!!

தேர்வு எழுதும் நகரத்தை மாற்ற ஒரு அறிய வாய்ப்பு – ஐஐடி நிறுவனம் அறிவிப்பு!!!

0
தேர்வு எழுதும் நகரத்தை மாற்ற ஒரு அறிய வாய்ப்பு – ஐஐடி நிறுவனம் அறிவிப்பு!!!
தேர்வு எழுதும் நகரத்தை மாற்ற ஒரு அறிய வாய்ப்பு - ஐஐடி நிறுவனம் அறிவிப்பு!!!
தேர்வு எழுதும் நகரத்தை மாற்ற ஒரு அறிய வாய்ப்பு – ஐஐடி நிறுவனம் அறிவிப்பு!!!

ஐஐடி பம்பாய் நிறுவனம் நடத்தவிருக்கும் கேட்2021 தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது தேர்வுக்கான நகரத்தை மாற்றி அமைக்க வாய்ப்பினை வழங்கியுள்ளது. இதன்படி அவர்களது அதிகாரப்பூர்வ இணையதளமான appsgate.iitb.ac.in மாற்றங்கள் செய்யலாம் என அறிவித்துள்ளது.

கேட்2021 தேர்வு:

ஐஐடி பம்பாய் நிறுவனம், பொறியியல் பட்டதாரி திறனுக்கான சோதனை தேர்வான கேட் 2021 நடத்துகிறது. பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை ஆகிய இளங்கலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், மற்றும் கலை, வர்த்தகம் மற்றும் அறிவியல் ஆகிய முதுகலை நிலை படிப்புகளில் சேர விரும்புபவர்களை GATE 2021-ஐ நடத்துவதன் மூலம் தேர்ந்தெடுப்பது ஐ.ஐ.டி பம்பாய் நிறுவனத்தின் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஆண்டு கேட் தேர்வுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்தவர்கள் மட்டும் வருகிற டிசம்பர் 14 முதல் தேர்வு நகரத்தினை மாற்றுவதற்கான இறுதி வாய்ப்பினை அளித்துள்ளது. இதுகுறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில்,”GOAPS போர்ட்டலில் 15.12.2020-க்குள் இலவச செலவில் தேர்வு எழுதும் நகரத்தை மாற்றுவதற்கான கடைசி மற்றும் இறுதி வாய்ப்பு” என குறிப்பிட்டுள்ளது.

5 கோடி வேலை வாய்ப்பு- நிதின்கட்கரி அறிவிப்பு

இதுகுறித்து அந்நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை மற்றும் விண்ணப்பித்தவர்களில் அதிகபடியானோர் வைத்த கோரிக்கையின்படி தேர்வு நகரத்தை மாற்ற கடைசி வாய்ப்பினை வழங்கியதாக கேட்2021 தெரிவித்துள்ளது. இதனால் கேட் லிங்க் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இனி வேறு எந்த மாற்றத்திற்காகவும் கோரிக்கை ஏற்கப்படாது என்பதால், விண்ணப்பித்தவர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

GATE 2021 அட்மிட் கார்டை சரியான நேரத்தில் உருவாக்க வேண்டும் என்பதற்காகவும், மையங்களை விரைவாக ஒதுக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த அறிவிப்பு வலியுறுத்தியுள்ளது.GATE நுழைவுத் தேர்வு அனைத்தும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TNEB Online Video Course

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here