Home news ஓய்வூதியதரர்களுக்கு ஓய்வூதியம் திடீரென நிறுத்தம் – அரசு கொடுத்த விளக்கம்!

ஓய்வூதியதரர்களுக்கு ஓய்வூதியம் திடீரென நிறுத்தம் – அரசு கொடுத்த விளக்கம்!

0
ஓய்வூதியதரர்களுக்கு ஓய்வூதியம் திடீரென நிறுத்தம் – அரசு கொடுத்த விளக்கம்!
ஓய்வூதியதரர்களுக்கு ஓய்வூதியம் திடீரென நிறுத்தம் - அரசு கொடுத்த விளக்கம்!
ஓய்வூதியதரர்களுக்கு ஓய்வூதியம் திடீரென நிறுத்தம் – அரசு கொடுத்த விளக்கம்!

கேரளாவில் விதவை/திருமணமாகாத பயனாளிகளின் நலனிற்காக வழங்கப்படும் ஓய்வூதியம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

ஓய்வூதியம் நிறுத்தம்

கேரளா அரசு சார்பில் விதவை/திருமணமாகாதவர்களுக்கு மாதம் ரூ. 1800 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மறுமணம் செய்யவில்லை என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்காத காரணத்தால், 82,758 விதவை அல்லது திருமணமாகாத ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. அது தவிர அனைத்து ஆவணங்களையும் சமர்பித்தவர்களுக்கும் கூட ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெள்ள நிவாரணத்திற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு – மத்திய அரசு உத்தரவு!

கடந்த 5 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது ஆயிரக்கணக்கானோர் ஒதுக்கப்பட்டு இருப்பதால் ஓய்வூதியதாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோழிக்கோடு மாநகராட்சியில் மட்டும் தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்த நிலையில் 2937 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இது குறித்து பல நகராட்சி அமைப்புகளில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களில் தவறு இல்லை என்பதை உறுதி செய்த உள்ளாட்சி அமைப்புகள், தொழில்நுட்பப் பிழை காரணமாக இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்க வேண்டும் என விளக்கம் கொடுத்தனர்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here