Home news தமிழக மருத்துவ துறையில் 1021 காலிப்பணியிடங்கள் – ஏப்.25 & 27ம் தேதி தேர்வு..!

தமிழக மருத்துவ துறையில் 1021 காலிப்பணியிடங்கள் – ஏப்.25 & 27ம் தேதி தேர்வு..!

0
தமிழக மருத்துவ துறையில் 1021 காலிப்பணியிடங்கள் – ஏப்.25 & 27ம் தேதி தேர்வு..!
தமிழக மருத்துவ துறையில் 1021 காலிப்பணியிடங்கள் - ஏப்.25 & 27ம் தேதி தேர்வு..!
தமிழக மருத்துவ துறையில் 1021 காலிப்பணியிடங்கள் – ஏப்.25 & 27ம் தேதி தேர்வு..!

தமிழகத்தில் மருத்துவ துறையில் காலியாக இருக்கும் மருத்துவர்கள், மருந்தாளுநர்கள் உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ளார்.

மருத்துவ துறை

தமிழகத்தில் கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியிடங்களில் 4,308 காலிப்பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்படும் அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்வுகளும் நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக முதல்வர் பணி ஆணைகளை வழங்கினார். இதையடுத்து, நடப்பு ஆண்டில் 1021 மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC அரையாண்டு & மொழித்தேர்வு – ஏப்ரல் 3 கடைசி தேதி..!

மேலும் இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளதாவது, மருத்துவத்துறையில் இருக்கும் காலிப்பணியிடத்தை நிரப்புவது தொடர்பான வழக்கு ஒன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்தது. தற்போது இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், மருத்துவத்துறையில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி வருகிற ஏப்ரல் 25ம் தேதி அன்று விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள தகுதியான நபர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து 986 மருந்தாளுநர்கள் பணியிடத்தரிக்கு வருகிற ஏப்ரல் 26, 27ம் தேதிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது என்று கூறியுள்ளார். இதையடுத்து இந்த இரு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மே மாதத்தில் பணி ஆணைகள் தமிழக முதல்வரால் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here