Home news Education CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நவ.9ம் தேதி நுழைவுச்சீட்டு வெளியீடு!

CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நவ.9ம் தேதி நுழைவுச்சீட்டு வெளியீடு!

0
CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நவ.9ம் தேதி நுழைவுச்சீட்டு வெளியீடு!
CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - நவ.9ம் தேதி நுழைவுச்சீட்டு வெளியீடு!
CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நவ.9ம் தேதி நுழைவுச்சீட்டு வெளியீடு!

மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ பொதுத்தேர்வில் நுழைவுச்சீட்டு மற்றும் வழிகாட்டுதல்கள் அனைத்தும் நவம்பர் 9ம் தேதி அன்று வெளியிடப்படும் என்று கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

தேர்வு நுழைவுச்சீட்டு:

கொரோனா கால ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டது. மதிப்பெண்களை விட மாணவர்களின் நலன் மட்டுமே முக்கியம் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்தது. இதனால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்று முறைகளில் இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.

FD திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7% வரை வட்டி தரும் வங்கிகள் – முழு விவரம் இதோ!

இதனால் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, உயர்கல்வி சேர்க்கையில் இதனால் பாதிப்புகள் வரக்கூடாது என்று 2021-2022ம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்தது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2021 – 2022ம் கல்வியாண்டில் பொதுத்தேர்வை இரண்டு பருவங்களாக நடத்த முன்னதாக திட்டமிட்டது.

அதன்படி முதல் பருவத்தேர்வு நவம்பர் – டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும் என்றும், இரண்டாம் பருவத்தேர்வு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, தேர்வுகள் நவம்பர் 17 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 16 ஆம் தேதியும் முதல் பருவ பொதுத்தேர்வுகள் தொடங்கப்பட உள்ளது. சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுச் சீட்டு மற்றும் தேர்வு வழிகாட்டுதல்கள் நவம்பர் 9 ஆம் தேதியன்று cbse.gov.in மற்றும் cbse.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் – அடுக்கடுக்கான முறைகேடுகள்! தலைவர் சஸ்பெண்ட்!

முதல் பருவ பொதுத்தேர்வில் பல தேர்வு வினாக்கள் மட்டுமே 90 நிமிடங்களுக்கு நடத்தப்படும் என்றும், தேர்வின் போது, வினாத்தாள்களைப் படிக்க 20 நிமிடங்கள் வழங்கப்படும். தாள்கள் காலை 10:30 மணிக்கு பதிலாக 11:30 மணிக்கு தொடங்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here