Home news FD திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7% வரை வட்டி தரும் வங்கிகள் – முழு விவரம் இதோ!

FD திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7% வரை வட்டி தரும் வங்கிகள் – முழு விவரம் இதோ!

0
FD திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7% வரை வட்டி தரும் வங்கிகள் – முழு விவரம் இதோ!
FD திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7% வரை வட்டி தரும் வங்கிகள் - முழு விவரம் இதோ!
FD திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7% வரை வட்டி தரும் வங்கிகள் – முழு விவரம் இதோ!

மூத்த குடிமக்களுக்கு சிறந்த வங்கி சேவையை அளித்து வரும் வங்கித்துறை நிறுவனங்கள் சில நிலையான வைப்புத்தொகை (FD) கணக்கில் 7% வரை வட்டி வழங்குகின்றன. இவ்வங்கிகள் தரும் வட்டி விகிதங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதம்

இந்தியாவில் பணம் சேமிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக கருதப்படுவது நிலையான வைப்புத்தொகை (FD) திட்டமாகும். இந்த சேமிப்பு திட்டம் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) ஆகியவற்றால் வழங்கப்படுகிறது. இந்த நிலையான வைப்புத் தொகையானது, பெரும்பாலும் நடுத்தர வர்க்கம் மற்றும் மூத்த குடிமக்கள் மத்தியில் சிறந்த முதலீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தில் பணத்தை சேமிப்பவர்களுக்கு ஒரு உறுதித் தன்மையை வழங்குகிறது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் – அடுக்கடுக்கான முறைகேடுகள்! தலைவர் சஸ்பெண்ட்!

அதிலும் நிலையான வைப்புத்தொகை (FD)கணக்குகளுக்கான வட்டி விகிதம் பொதுவாக சேமிப்புக் கணக்கை விட அதிகமாக இருக்கும். பொதுவாக FD சேமிப்பு ஒரு நீண்ட கால வைப்புத்தொகைகள் என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் அவை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆண்டுகள் அதாவது 7 முதல் 10 ஆண்டுகள் வரை பராமரிக்கப்படுகின்றன. இதனுடன் FD கணக்குகள் முதலீடுகளுக்கு உத்தரவாதமான வருமானத்தையும் வழங்குகின்றன.

தமிழகம் முழுவதும் 23 நாட்கள் விடுமுறை – பட்டியலை வெளியிட்ட அரசு! நோட் பண்ணிக்கோங்க!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியில் கடந்த 2 ஆண்டுகளாக FD விகிதங்கள் குறைவாகவே உள்ளன. பொதுவாக FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்களுக்கு அதிகமாக இருக்கும். தரவுகளின்படி, பொது வட்டி விகிதங்கள் குறைவாக இருந்தாலும் ஐந்து தனியார் துறைகள் மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு கணக்குகளுக்கு 7 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன. அந்த வங்கிகளின் வட்டி விகிதங்களை குறித்து இப்போது காணலாம். இதில் முதலாவதாக,

YES வங்கி:

யெஸ் பேங்க், மூத்த குடிமக்களின் FD கணக்குகளுக்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வரை 7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. தனியார் துறை வங்கிகளில் இதுவே சிறந்த வட்டி விகிதமாகும். எனவே, ஒருவர் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்தால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அது ரூ.1.23 லட்சமாக உயரும்.

RBL வங்கி

முன்பு ரத்னாகர் வங்கி என்று அழைக்கப்படும் RBL வங்கி மூன்று ஆண்டுகளுக்கு நிலையான வைப்பு கணக்குகளை திறப்பதற்கு 6.80 சதவீத வட்டி விகிதங்களை வழங்குகிறது. ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில், மூத்த குடிமகனுக்கு வட்டியாக ரூ.22,000 ரூபாய் கிடைக்கும்.

IndusInd வங்கி:

இத்துறையின் புதிய போட்டியாளர்களில் ஒன்றான IndusInd வங்கி, மூன்று ஆண்டுகளுக்கு தங்களுடைய நிலையான வைப்பு கணக்குகளை திறக்கும் மூத்த குடிமக்களுக்கு 6.50 சதவீத வட்டி விகிதங்களை வழங்குகிறது. முதலீட்டாளர்களுக்கு ரூ.1 லட்சம் வைப்புத் தொகையில் ரூ.21,000 வட்டி கிடைக்கும். இந்த சேமிப்பில் குறைந்தபட்ச முதலீடு 10,000 ரூபாயாக இருக்க வேண்டும்.

DCB வங்கி:

DCB வங்கியில் கணக்கு தொடங்கும் மூத்த குடிமக்கள் மூன்று ஆண்டுகளுக்கு 6.45 சதவீத வட்டி விகிதத்தை பெறுகிறார்கள். இவ்வங்கியில் சுமார் 1 லட்ச ரூபாய்க்கு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ரூ.21,000 வட்டி கிடைக்கும்.

IDFC வங்கி

IDFC வங்கியின் நிலையான வைப்பு விகிதம் 6.25 சதவீத வட்டியில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று ஆண்டுகளுக்கு தங்கள் கணக்குகளை திறக்கும் மூத்த குடிமக்களுக்கு ரூ.1 லட்சம் வைப்புத் தொகை மூன்று ஆண்டுகளில் ரூ.1.20 லட்சமாக மாறும்.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here